Showing posts with label google. Show all posts

Saturday, 7 January 2012

கூகிள் வரலாறு(history of google)


கூகிள் வரலாறு

கூகுள் ஒரு பிரபல்யமான தேடுபொறியாகும். இதன் வரலாறு இங்கு கட்டுரை மூலமாக உள்ளடக்கப்படுகின்றது.


ஆரம்ப வரலாறு

கூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக(Ph.D.) கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும். ஆரம்பத்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கான விடயமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி தேடுபொறியில் தேடப்படும் விடயம் எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடுபதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இது அப்போது பாவனையில் இருந்த தேடுபொறி தனது தேடும் விடயத்தை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு முகமான வரிசை) பதிலாக (கணினியின் திரையில்) கொடுத்ததை விட, தமது தேடுகருகியானது தேடிய விடையத்தின் பக்கங்களை அலசி தேடுபதிலாக வழங்கும் முறை சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனைபெயராக பாக்ரப்("BackRub") (பின்னால் தடவு அல்லது வருடு) என்ற பெயரை சூட்டியிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின்புல (backlinks) இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர். இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பத்ற்கு அந்த காலகட்டத்தில் சிறிய தேடு பொறி ராங்டெக்ஸ்(RankDex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.

தேடப்படும் விடையம் அடங்கிய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்த ஒரு இணையப் பக்கம் இணைக்கப் படுகின்றதோ அதுவே தேடப்படும் விடயத்தின் தொடர்பான பதில் என தமது ஆராச்சியை நியாயப்படுத்தினர். இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்களக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு கூகிள் தோன்றவும் அடிகோலினர். ஆரம்பத்தில் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயர் பாவிக்கப்பட்ட போதிலும் பின்னர் கூகிள்.கொம் (google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது. 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் கார்த் தரிப்பிட கொட்டகையில் கூகிள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.

மேலும், இவர்கள் ஆரம்பத்தில் மிக தீவிரமாக கூகோல்.கொம் (googol.com)என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு (Silicon Valley) பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல். கார் கொட்டகையில் இருந்து இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் 1999ம் மார்ச் மாதம் சிலிக்கன் பள்ளத்தாக்கிற்கு மாற்றலாகின. அங்கு வெவ்வேறு இரு இடங்களில் "கூகிள்" இயங்கிய போதிலும் விரைவான வருவாய்,வளர்ச்சி காரணமாக பெரிய கட்டிட தொகுதிக்கு வாடகை அடிப்படையில் 2003இல் மாற்றலாயிற்று. அன்றிலிருந்து அதே இடத்திலேயே இருப்பதுடன் அக் கட்டிடத் தொகுதி கூகிள்பிளெக்ஸ் (googolplex) எனவும் பெயர் பெற்றது. பின்பு 2006 இல் 319 மில்லியன் டொலர்களை கொடுத்து அந்த கட்டிடத்தொகுதியை கூகிள் கொள்முதல் செய்தும் கொண்டது.

கூகிள் தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. தேடுபொறியில் தேடப்படும் சொற்களுடன் தொடர்பான விளம்பரங்களை 2000ம் ஆண்டில் இருந்து கூகிள் சேர்க்கத் தொடங்கியதோடு விளம்பரங்கள் இணைப் பக்கங்களின் அமைப்பை குலைக்காமலும், இணைப் பக்கங்கள் கணனி திரைகளில் விரைவாக தோன்று வதற்காகவும் ஆரம்பத்தில் எழுத்துருக்களில் மட்டும் வடிவமைக்கப் பட்டிருந்தன. தேடுபொறியில் தேடலை ஒத்த விளம்பரங்கள் கேள்வி மூலமாக அல்லது சொடுக்கப்படும் விகிதத்திலும் விற்கப்படுவதுடன் இவற்றின் ஆரம்ப விலை 0.05 டொலராகவும் உள்ளது. இந்த தேடு விடையத்தை ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது Goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். கோட்டு.கொம் என்ற இதன் பெயர் "ஒவேச்சர் சேர்விசஸ்" (Overture Services) ஆகவும் பின்நாளில் யாகூ! இனால் கொள்முதல் செய்யப்பட்டு "யாகூ சேர்ச் மாக்கெற்றிங்" (Yahoo! Search Marketing) ஆயிற்று. கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல புதிய நிறுவனங்களும் இணையத்தள சந்தையில் தோற்று விட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக வெற்றியீட்டி வருகிறது.

ஆரம்பத்தில் "கூகோல்" (googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்" என்பது மிக பிரபலம் ஆயிற்று. இன்று பெரும்பாலும் ஒவ்வொரு மொழியிலும் அதிகம் பேசப்படும் வினைச் சொல்லாக மாறி விட்ட இதை ஒக்ஸ்ஃபோர்ட் அகராதி 2006இல் சேர்த்ததுடன் அதனை 'கூகிள் தேடுபொறி இணையத்தில் தகவல் பெற பாவிக்கப்படுகின்றது' என அர்த்தப் படுத்தியும் உள்ளது. கூகிள் தேடுபொறி தேடுதலுக்கான பட்டியலிடும் தொழில் நுட்பமானது 2001ம் செப்ரம்பர் 4ம் திகதி காப்புரிமம் செய்யப் பட்டதுடன் ஸ்ரான்ஃபோர்ட் பல்கலைக்கழக அதிகாரபூர்வ கண்டுபிடிப்பாளர் காப்புரிமத்திலும் பட்டியலிடப் பட்டுள்ளது.

கூகிளின் பங்குச் சந்தை வருகை

கூகிள் தேடுபொறி 1998 செப்ரம்பர் 7இல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நிறுவப்பட்டது. இணைய தேடுதலிலும் இணைய விளம்பரத்திலும் சிறப்பு பங்கு வகிக்கும் கூகிள் 2004ம் ஆகஸ்ட் 19ம் நாளில் இருந்து பொது மக்கள் நிறுவனமாக தன்னை பதிவு செய்துகொண்டது. இந்த நிறுவனத்தில் 15,916 முழுநேர வேலையாட்கள் (2007 செப்டம்பர் 30ம் கணக்கெடுப்பின் படி) பணியாற்றுவதுடன் இதுவே நாஸ்டாக் (NASDAQ) இல் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் பெரியதுமாகும். லாரி பேஜ் , சேர்ஜி பிரின் ஆகியோரினால் சேர்ந்து உருவாக்கப்பட்ட கூகிள் நாஸ்டாக் (NASDAQ) பங்குச்சந்தையில் வந்த 2004ம் ஆகஸ்டு 19 அன்று $1.67 பில்லியன்களுக்கு பங்குகள் விற்பனை ஆகியதுடன் $23 பில்லியன் மேலாக கூகிள் நிறுவனம் மதிப்பாகியிருந்தது. படிப்படியாக தொடரான புதிய பொருட்களின் வடிவமைப்பு, மற்றய நிறுவனங்களை கொள்முதல் செய்வது, பங்குதாரர்கள், ஆரம்பத்தில் இருந்த விளம்பர யுக்தி விஸ்தரிப்பு, இணைய மின்-அஞ்சல் (webmail), இணையவழி வரைபடம்(Google Earth), அலுவலக உற்பத்தி ஆகியவற்றுடன் இணையவழி வீடியோ(video) வையும் இணைத்து கொண்டதன் மூலமாக பன்மடங்கு (4மடங்கிலும் மேலாக) மதிப்பில் கூகிள் தன்னை தற்போது உயர்த்திக் கொண்டுள்ளது. அத்துடன் 2005ம் யூன் மாதம் $52 பில்லியன் சந்தைப் பெறுமதியுடன் $7 பில்லியன் பணத்தினையும் கூகிள் தம் வசம் வைதிருந்தது. இத்தனைக்கும் "பிசாசு மாதிரி இருக்காதீர்" (don't be evil) (இதையே தனது வியாபார அடை மொழியாக கூகிள் பதிவு செய்திருந்தது.), என மற்றயவர்களை ஆரம்பத்தில் இருந்து கூறிவந்த கூகிள் தற்போது தனது நிலைப் பாட்டினை நியாயப்படுத்தி வருகிறது. மேலும், கூகிள் தனது தேடுபொறியின் இலச்சனை (logo) யில் பலவித கண்கவர் யுக்திகளை சிறப்பு நாட்களில் கூகிள் டூடிள்ஸ் (Google Doodles) என வெளியிட்டும் வருவதும் யாருமறிந்ததே.

மூலதனமும் பங்குச் சந்தையும்

முதலாவது முதலீடாக ஒரு இலட்சம் டொலர்களை சன் மைக்கிரோசிஸ்டம்ஸ் (Sun Microsystems) இன் ஸ்தாபகர்களில் ஒருவர் மூலம் மட்டுமே பெற்றனர் என்பதுடன், அப்போது கூகிள் நிறுவனம் தோன்றி இருக்கவுமில்லை. இந்த முதலீட்டின் பின் 6 மாதங்கள் சென்ற நேரத்தில் பல முதலீட்டாளர்கள் முதலிட முன் வந்தும் இருந்தனர். அத்துடன், 2003ம் ஒக்டோபர் மாதத்தில் பங்குச் சந்தையில் கூகிளை எடுத்துச்செல்ல ஆலோசிக்கும் வேளை மைக்கிரோசொஃப்ட் (Microsoft) புகுந்து பங்காளியாக அல்லது தத்து எடுப்பதற்கு எடுத்த முயற்சி கைகூடாமற் போயிற்று. ஜனவரி 2004இல் உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளான மோர்கன் ஸ்ரான்லி (Morgan stanley), கோல்மான் சாச்ஸ் (Goldman Sachs) இனால் பங்குச் சந்தையில் சேர்வதற்கான ஏற்பாடு தொடங்கபட்டது. பங்குச் சந்தையில் முதல்நாள் சேரும் வேளை $4 பில்லியங்களாவது திரட்டப்படும் எனவும் கணக்கிட்டனர்.

இதனிடையே கூகிளானது 2004ம் மேமாதம் இரு பெரிய முதலீட்டளர் வங்கியில் ஒன்றான கோல்மானை வெட்டி விட்டு வேறொரு பிரபல்யமான வங்கியை இணைத்துக் கொண்டு 2004ம் ஆகஸ்டு 19ம் நாள் முதல் முதலாக பங்குச் சந்தைக்கு 19,605,052 பங்குகளுடன் வந்தபோது ஒவ்வொரு பங்கும் $85க்கு விற்கப்பட்டது. முதல் நாள் மொத்தமாக கைமறிய பங்குகள் 22,351,900 என்பதுடன் அன்றைய இறுதி நேர விலை $100.34 ஆக மூடப்பட்டது, இது உத்தேசிக்கப்பட்ட அளவு தொகையை விடவும் மிக குறைவாகவும் இருந்தது. எனினும் அன்று கூகிளின் இரட்டையர்கள் தம்வசம் 271 மிலியன் பங்குகளை வைத்திருந்ததன் மூலமாக $23 பிலியன்கள் மேல் நிறுவனத்தை மதிப்பு ஏற்றியதோடு $1.67 பில்லியன்களை பணமாக திரட்டியும் கொண்டனர். அத்தோடு கூகிளில் பணியாற்றும் பலரையும் அன்று திடீர் கடதாசி டொலர் மில்லியனர்கள் ஆக்கியதும் அல்லாமல் வியாபார எதிரியாக இருக்கக் கூடிய யாகூ! (8.4 மில்லியன் பங்குகளை நட்டஈடாக பெற்றுக் கொள்ள ஒரு பேரத்தில் பங்குச் சந்தையின் 10 நாள் முன் உடன் பட்டன). ஐயும் ஆக்கியிருந்தது. இதன் அபார தொடர் வளர்ச்சியில் 2005ம் யூன் மாதம் கூகிள் நிறுவனம் $52பில்லியன்கள்(பங்குகள் தவிர $7பில்லியன்கள் பணமாக) மேல் மதிப்பானதுடன் இதுவே உலகின் மிகப்பெரிய பெறுமதியுள ஊடகவியல் நிறுவனம் ஆயிற்று. தொடற்சியாக பங்குகள் ஏற்ற இறக்கம் கண்டு 2007ம் ஒக்டோபரில் ஒரு பங்கு $700 ஆக இருந்த கூகிளின் பங்குகள் அமெரிக்கா, லண்டன் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப் பட்டுள்ளது.

சுவீகரிப்பு, கூட்டுக்கள்

கூகிள் பெப்ரவரி 2003இல் வெப்லொக் (weblog) இன் முன்னோடியும் புளொக்கர்(Blogger) இன் சொந்தக்காரரான பைரா லாப்ஸ் (Pyra Labs)ஐ சொந்தமாக்கிற்று. உலக இணையத் தளத்தின் 84.7 விகிதமான தேடுதல்களை 2004ம் முற் பகுதியில் கூகிள் நிறுவனமானது யாகூ, ஏ.ஓ.எல் (AOL), சி.என்.என் (CNN) ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து செய்திருந்தது, பின்பு 2004ம் பெப்ரவரி இல் யாகூ விலகிக் கொண்டு தனது சொந்த தேடுபொறியை தொடங்கிற்று. யாகூ விலகிக் கொண்ட விடயம் கூகிள் நிறுவனம் சந்தித்த ஒரு பெரிய சவாலாக இருந்த போதிலும் ஜீமெயில்( Gmail), ஓர்க்குற்(orkut), மற்றும் புதிய பல யுக்திகள் மூலமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.

அத்துடன் கூகிள் நிறுவனம் தனது நீண்டகால ஆராய்ச்சிக்கான நாசா (NASA) இன் கூட்டு 2005ம் செப்டம்பரிலும், இணையத்திற்கான கூட்டு "ஏ.ஓ.எல்" (AOL)லுடன் டிசம்பர்இலும் உருவாக்கிக் கொண்டது. மேலும், சன்மைக்கிரோ (Sun Microsystems) உடன் தொழில் நுட்ப்பத்தை பகிர்ந்து கொள்வதோடு, கூகிள் நிறுவனம் தனது ஊளியர்களை ஓப்பிண் ஆபிஸ்(OpenOffice.org) நிறுவன வேலைகளிலும் வாடகைக்கு அமர்த்தி உள்ளது. இதனிடையே 2004கும் 2006ம் வருட இறுதிக்கும் உள்ள காலகட்டத்தில் பல மென்பொருள் முன்மாதிரி நிறுவனங்களையும் வானோலி விளம்பர நிறுவனம் டிமார்க்(dMarc)ஐ தம் வசமாக்கிக் கொண்டதுடன் $900 விளம்பர உடன்பாட்டை மைஸ்பேஸ் (MySpace) உடன் செய்தனர். கூடவே, 2006இன் இறுதி காலத்தில் யூ டியூப் (YouTube) என்ற மிகவும் பெயர் பெற்ற இணையத்தள வீடியோ $1.65 பில்லியனிற்கு கூகிளினால் கொள்முதலானது, இத்துடன் விக்கி தொழில் நுட்பத்தை வடிவமைத்த ஜொட்ஸ்பொட் (JotSpot)ம் சொந்தமாக்கப்பட்டது.

இத்துடன் நிற்காமல் 2007ம் ஏப்ரலில் $3.1பில்லியன் கொடுத்து டபள் கிளிக் (DoubleClick)ஐ கொள்முதல் செய்ததோடு 2007ம் யூலை 9இல் பொஸ்டினி (Postini)யும் கொள்முதல் செய்து கொண்டது. இத்தனைக்கும் மத்தியில் தனது பரம எதிரியான மைக்கிரோசொப்ற் (Microsoft) இன் பல திறமை உள்ளவர்களையும் தம்வசம் ஈர்த்ததுடன் அந் நிறுவனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை நீதிமன்றம் வெளியே இரகசியமாக 2005 டிசம்பர் 22இல் தீர்த்தும் கொண்டது. கூகிள் நிறுவனம் 2006ல் ".மோபி" (.mobi) எனப்படும் கைத்தொலைபேசி இணைய முகவரி தோற்றத்திற்கு காரண கர்த்தாவாகவும், முதலீடு இட்ட நிறுவனமாகவும் முன்நிலை படுத்தியதோடு ஸீங்கு.மோபி (Zingku.mobi), கூகிள்.மோபி (Google.mobi)இன் சொந்தக் காரருமாகவும் கூகிள் உள்ளது.

நன்கொடை

2004ல் இலாபம் ஈட்டாத "கூகிள்.ஓர்க்" (Google.org) ஐ நிறுவியதோடு ஆரம்ப நிதியாக $1பிலியன் வைப்பு செய்யப்பட்டது. இந் நிறுவனத்தின் முன்நிலை கவனிப்புக்களாக சூழல் வெப்பமாகுதல் தடுத்தல்,உலக சுகாதாரம்,உலக வறுமை ஒழிப்பு என்பன உள்ளடக்கப் பட்டுள்ளது. அத்துடன் இந்த அமைப்பின் முதல் திட்டமாக மின்சாரத்தில் இயங்கும் வகனங்களை வடிவமைக்கும் திட்டம் டாக்டர்.லாரி (Dr.Larry) தலைமையில் தொடங்கப் பட்டுள்ளது.

தேடுபொறி


தேடுபொறி

தேடுபொறி அல்லது தேடற்பொறி என்பது ஒர் கணினி நிரல் இணையத்தில் குவிந்து கிடக்கும் தகவல்களில் இருந்தோ கணினியில் இருக்கும் தகவல்களில் இருந்தோ நமக்கு தேவையான தகவலைப்பெற உதவுகின்றது. பொதுவாகப் பாவனையாளர்கள் ஓர் விடயம் சம்பந்தமாக தேடுதலை ஓர் சொல்லைவைத்து தேடுவார்கள். தேடு பொறிகள் சுட்டிகளைப் பயன்படுத்தி விரைவான தேடலை மேற்கொள்ளும். தேடுபொறிகள் என்பது பொதுவாக இணையத் தேடுபொறிகளை அல்லது இணையத் தேடற்பொறிகளையே குறிக்கும்.

வெறுசில தேடுபொறிகள் உள்ளூர் வலையமைப்பை மாத்திரமே தேடும். இணைய தேடு பொறிகள் பல பில்லியன் பக்கங்களில் இருந்து நமக்குத் தேவையன மிகப் பொருத்தமான பக்கங்களைத் தேடித் தரும். வேறுசில தேடற்பொறிகள் செய்திக் குழுக்கள், தகவற்தளங்கள், திறந்த இணையத்தளங்களைப் பட்டியலிடும் DMOZ.org போன்ற இணையத் தளங்களைத் தேடும். மனிதர்களால் எழுதப்பட்ட இணையத் தளங்களைப் பட்டியலிடும் தளங்களைப் போன்றல்லாது தேடு பொறிகள் அல்கோரிதங்களைப் பாவித்துத் தேடல்களை மேற்கொள்ளும். வேறு சில தேடற்பொறிகளோ தமது இடைமுகத்தை வழங்கினாலும் உண்மையில் வேறுசில தேடுபொறிகளே தேடலை மேற்கொள்ளும்.

ஆரம்ப காலத்தில் ASCII முறை வரியுருக்களை கொண்டே தேடு சொற்களை உள்ளிட முடிந்தது. தற்போது ஒருங்குறி எழுத்துக்குறிமுறையை பல தேடுபொறிகளும் ஆதரிப்பதால் ஆங்கிலத்தில் மட்டுமல்லாது உலக மொழிகள் அனைத்திலும் அவ்வம் மொழிப்பக்கங்களை தேடிப்பெறக்கூடியதாகவுள்ளது.

எவ்வாறு தேடு பொறிகள் வேலை செய்கின்றன

இணையத்தில் தவழ்தல்சுட்டியிடுதல்தேடுதல் தேடு பொறிகள் வையக வலையில் அல்லது உலகளாவிய வலைப் பக்கங்களில் இருந்து பெறப்பட்ட பல்வேறு தகவல்களைச் சேமித்தே தேடல்களை மேற்கொள்ளுகின்றன. இவை இணையப் பக்கங்களை தவழ்வதால் (சில சமயங்களில் சிலந்திகள் என்று அழைக்கப் படுகின்றன) குறிப்பிடப் பட்ட பக்கங்களின் ஒவ்வோர் இணைப்பிற்கும் இவை செல்லும். சில சமயங்களில் சில பக்கங்களைத் தவிர்ப்பதற்கு ரோபோக்கள் முடிவு செய்யும். அவை இணையப் பக்கங்களை அலசி ஆராய்ந்து அவை எவ்வாறு சுட்டியிடப் படும் எனத் தீர்மானிக்கப்படும். கூகிள் போன்ற சில தேடுபொறிகள் முழுப்பக்கத்தையோ அல்லது பகுதியையோ சேமித்துக் கொள்ளும்.

தேடல்களை மேற்கொள்ளல் 

தேடுபொறிகளில் தேடும்பொழுது ஒருங்குறியில் உள்ள சொற்களை இட்டுத் தேடலாம். யாஹூ! தேடல்களில் தேடல்களைத் தட்டச்சுச் செய்யும் பொழுதே நீங்கள் என்ன விடயத்தைத் தேட முற்படுகின்றீர்கள் என்று ஊகித்து ஆலோசனைகளை வழங்கும் இதே வசதி கூகிளிலும் பரீட்சாத்தகரமாக உள்ளது. ஓர் குறிப்பிட்ட தளத்தைத் தேடவிரும்புகின்றீர்கள் என்றால் தேடுபொறி site:ta.wikipedia.org என்றவாறு உள்ளீடு செய்தால் தமிழ் விக்கிபீடியாவில் உள்ள தேடுபொறி தொடர்பான கட்டுரைகளைத் தேடிக்கொள்ளும்

எப்போதும் கூகுள் தானா ?

எப்போதும் கூகுள் தானா ?

நமக்கு வேண்டிய தகவல்களை இன்டர் நெட்டில் தேட பெரும்பாலானோர் பயன்படுத்துவது கூகுள் சர்ச் இஞ்சின் தான். இவ்வகையில் கூகுள் மட்டுமே இந்த கம்ப்யூட்டர் உலகின் ஒரே ஒரு சர்ச் இஞ்சின் போலத் தோற்றத்தை உருவாக்கி உள்ளது. தேடல் பிரிவில் ஏறத்தாழ 50% பேர் கூகுள் தளத்தையே பயன்படுத்துகின்றனர்.



இத்துடன் யாஹூ மற்றும் எம்.எஸ்.என். ஆகியவற்றையும் சேர்த்தால் 90% வந்துவிடுகிறது. அப்படியானால் வேறு சர்ச் இஞ்சின்கள் உள்ளனவா? என்று உங்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் தெரிகின்றன.




ஆம், இன்னும் பல சர்ச் இஞ்சின்கள் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு காணலாம். அவை எப்படி செயல்படுகின்றன என்பதற்காக ஓரிருமுறை இவற்றைப் பயன்படுத்திப் பாருங்களேன்.



1.www.chacha.com : சிறப்பாகச் செயல் படும் சர்ச் இஞ்சின். தற்போது இது அமெரிக்காவில் மொபைல் போனுக்கும் தேடிய தகவலை அனுப்புவதால் இந்த தளத்திற்குச் சென்றவுடன் மொபைல் போனில் நாம் தேடும் சொற்களைக் கேட்டு தளம் திறக்கப்படும். இதில் looking for chacha classic என்ற இடத்தில் கிளிக் செய்தால் கம்ப்யூட்டரிலேயே முடிவுகள் தருவதற்கான டெக்ஸ்ட் விண்டோ கிடைக்கும். இதில் டெக்ஸ்ட் டைப் செய்தால் கூகுள் தளத்தில் கிடைப்பது போலவே தகவல்கள் கிடைக்கின்றன. இதற்கு எந்த ரெஜிஸ்ட்ரேஷனும் தேவையில்லை.


2. www.stumple.upon.com : இந்த தளம் நாம் கொடுக்கும் தேடல் சொற்களை வைத்து நம்முடைய விருப்பங்களை அறிந்து அதற்கேற்ற வகையில் தளங்களைப் பிரித்து அடுக்கித் தருகிறது. தொடக்கத்திலிருந்து நம் தேடல்களைக் கவனித்து இந்த சேவையைத் தருகிறது. ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் இது செயல்படுகிறது.


3. www.ask.com : இந்த தளத்தினை நம் நாட்டில் பலர் பயன்படுத்துகின்றனர். இதன் சிறப்பு இது நம்மை வழி நடத்தும் விதம் தான். நம் தேடல் தன்மையைப் புரிந்து கொண்டு தேடல் வழிகளை இன்னும் சுருக்கி தேடும் தளங்களைப் பட்டியலிடும். எடுத்துக் காட்டாக computer tips எனத் தேடப் போகையில் computer tips and tricks எனத் தேடலாமே? என்று வழி காட்டும்.



computer tips and tricks எனத் தேடப்போனால் windows xp tricks அல்லது word tips எனத் தேடலாமா? என்று கேட்கும். மிக மிகப் பயனுள்ள தேடு தளம்.


4.www.kosmix.com : இந்த தளம் தொடக்கத்திலேயே தகவல் துறைகளைப் பிரித்து அதிலிருந்து தேடலை மேற்கொள்ள வழி காட்டுகிறது. மெடிகல் மற்றும் உடல் நலம் சார்ந்த தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மற்றவற்றையும் தேடித் தருகிறது.


5.www.technocrati.com இந்த தளம் செய்திகளுடன் கூடிய ஒரு தளம். யாஹூ போல செயல்படுகிறது. இதில் தேடல் முடிவுகள் சிறிய பாராக்களாக சில வேளைகளில் சிறிய படங்களுடன் தரப்படுகின்றன. நாம் தேடிய சொற்கள் அதில் எங்கெங்கு உள்ளன என்று ஹை லைட் செய்யப்படுகிறது.


6.www.draze.com : கூகுள் அளவிற்கு தகவல்களை இந்த தளம் அளிக்கிறது. மேலும் மற்ற தளங்களோடு எங்கள் தேடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள் என்று சவால் விட்டு மற்றதில் தேடுகையில் என்ன என்ன இல்லை என்று பட்டியலிடுகிறது. திறன் கொண்ட சற்று சவாலான தளம் இது.


7.http://www.msdewey.com/ இந்த தளத்தில் தகவல் தேடுவது திரைப்படம் பார்ப்பது போல இருக்கிறது. மிஸ்.ட்யூவி என்ற அழகான இளம் பெண் தேடலின் போது கூடவே இருக்கிறார். இவர் அறிமுகமாவது ஒரு சினிமா போல தரப்படுகிறது.தேடலுக்கான சொல் அமைக்கும் இடத்தில் சொல்லை டைப் செய்யாவிட்டால் ‘ஹலோ இங்கு ஏதாவது டைப் செய்யுங்களேன்’ என்று கதவைத் தட்டி அழைக்கிறார்.



ஒன்றும் டைப் செய்யவில்லை என்றால் எப்போதும் ஒரு புன்முறுவலுடன் நம்மைத் தேடுகிறார். ஒரு மேகஸினை எடுத்துப் படிக்கிறார். போன் செய்கிறார். ஏதேனும் டைப் செய்திருக்கிறோமா என சர்ச் பாக்ஸை எட்டிப் பார்க்கிறார். டைப் செய்து முடித்து தேடச் சொன்னால் ‘இருங்கள் மிஸ் ட்யூவி யோசிக்கிறார்’ என்ற செய்தி கிடைக்கிறது. பின் தேடல் சொல்லுக்கான பட்டியல் ஓடுகிறது. பத்து பத்தாக அல்ல; தொடர்ந்து ஓடுகிறது. நீங்கள் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்திப் பார்க்கலாம். இதில் ட்யூவியின் பார்வையில் சிறந்த தளங்கள் என அதிலேயே நல்ல தளங்கள் காட்டப்படுகின்றன. தேடலில் இது ஒரு தனி ரகம்.


8. http://searchwithkevin.com : இந்த தளம் இன்னொரு வகையில் வித்தியாசமானது. எங்கள் தளத்தில் தேடுங்கள்; அவ்வப்போது பரிசுகள் உண்டு என்று அழைக்கிறது. தள முகப்பில் தீயுடன் தேடுங்கள் என்று விளம்பரப் படுத்தப்படுகிறது. தேடலுக்கான முடிவுகள் குகூள் தளத்தில் கிடைப்பது போலவே கிடைக்கிறது. மற்றபடி வேறுபாடு எதுவும் இல்லை.


9. www.rollyo.com : இந்த தளம் தகவல்களைக் காட்டும் விதம் வித்தியாசமாக உள்ளது. மேலும் ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற வகையில் தேடலை அமைக்கலாம். எந்த தகவல் பிரிவில் உங்கள் தேடல் இருக் குமோ அதனை மட்டும் தேடும் வகையில் செயல் படலாம். எப்போதும் ஒரே மாதிரியாக கூகுள், யாஹூ மற்றும் மைக்ரோசாப்ட் தேடல் தளங்களையே பயன்படுத்திக் கொண் டிராமல் மற்றவற்றையும் பார்த்து பயனடையலாமே.

யாஹூ இந்தியாவின் புதுவித தேடல்


யாஹூ இந்தியா தளத்தின் சர்ச் இஞ்சின் புதிய வகைத் தேடலையும் முடிவு அறிவிக்கும் வழியையும் நடைமுறைப்படுத்தி உள்ளது. Glue Pages Beta என அழைக்கப்படும் இந்த வசதி யாஹூ இந்தியா தளத்தில் (www.yahoo.in) மட்டுமே உள்ளது. ஏதாவது ஒன்றைத் தேடினால் அது சார்ந்த அனைத்து தகவல்கள், படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தொகுக்கப்பட்டு தரப்படுகிறது.


எடுத்துக் காட்டாக “diabetes” என்று தேடினால் HowStuffWorks, Yahoo! Groups, Yahoo! Health, Yahoo! Answers, மற்றும் இது குறித்த blogs ஆகியவற்றிலிருந்து தகவல்கள் எடுக்கப்பட்டு தரப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கான தளங்களின் முகவரியும் தரப்படுகின்றன. தொடர்ந்து இன்னும் பல வகைகளின் கீழ் தகவல்களைப் பெற்றுத் தரும் வகையில் இந்த வசதி மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.


இணைய தளத்திற்கான ஷார்ட் கட்


உங்களுக்குப் பிடித்த இணைய தளங்களுக்கு ஷார்ட் கட் ஐகான் இருந்து அவற்றைக் கிளிக் செய் தால் நேரடியாக நீங்கள் அந்த தளத்திற்குச் சென் றால் எப்படி இருக்கும்? அப்படிச் செய்ய முடியுமா?


முடியும். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தொகுப் பில் உங்களுக்குப் பிடித்த இணைய தளத்தைப் பார்க்கையில் தளத்தின் முகவரிக்கு அருகே சிறிய ஆங்கில எழுத்தான “e” இருக்கும் அல்லவா? இப்போது உங்கள் பிரவுசர் விண்டோவைச் சிறிய தாக்கி அதன் பின் அந்த சிறிய “e” எழுத்து உள்ள கட்டத்தை இழுத்து வந்து டெஸ்க்டாப்பில் உள்ள காலியிடத்தில் விட்டு விட்டால் அதுதான் உங்களுக்குப் பிடித்த தளத்தின் ஷார்ட்கட். இந்த ஐகான்களின் மீது கிளிக் செய்தால் பிரவுசர் திறக்கப்பட்டு நீங்கள் தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

http://www.msdewey.com/ இந்த தளத்தில் தகவல் தேடுவது திரைப்படம் பார்ப்பது போல இருக்கிறது. மிஸ்.ட்யூவி என்ற அழகான இளம் பெண் தேடலின் போது கூடவே இருக்கிறார். இவர் அறிமுகமாவது ஒரு சினிமா போல தரப்படுகிறது. தேடலுக்கான சொல் அமைக்கும் இடத்தில் சொல்லை டைப் செய்யாவிட்டால் ஹலோ இங்கு ஏதாவது டைப் செய்யுங்களேன் என்று கதவைத் தட்டி அழைக்கிறார். ஒன்றும் டைப் செய்யவில்லை என்றால் எப்போதும் ஒரு புன்முறுவலுடன் நம்மைத் தேடுகிறார்.

கூகுள் தரும் புதிய வசதிகள்


கூகுள் தரும் புதிய வசதிகள்

வழக்கமான செமி கோலன் மற்றும் பிராக்கெட் மட்டுமே வைத்து அமைத்திடும் எமோட்டிகான்களிடமிருந்து
விடுதலை பெறுங்கள்.


கூகுள் மெயில் அண்மைக் காலமாக சில புதிய வசதிகளைத் தந்துள்ளது. இவற்றை ஒரு சிலரே கவனித்துப் பயன்படுத்தி வருகின்றனர். பலருக்கு இது போன்று வசதிகள் உள்ளன என்று தெரிய வாய்ப்புகள் இல்லாமல் உள்ளனர். சிலர் பயன்படுத்தி வந்தாலும் அனைவரும் அறிந்து கொள்ள இந்த வசதிகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.



* வண்ண லேபிள்கள் (Colored labels) : இந்த வண்ண லேபிள்கள் மூலம் உங்களுக்கான இமெயில்களை வகைப் படுத்த வசதியாக இருக்கும். ஒவ்வொரு லேபிள் பக்கத்தில் இருக்கும் கலர் பட்டி மீது கிளிக் செய்து ஒவ்வொரு மெயிலுக்கும் வண்ண லேபிள்களைக் கொடுங்கள்.




* குரூப் சாட்டிங் (Group chat) : சாட்டிங் எனப்படும் அரட்டையில் பலருடன் பேச வேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு விண்டோவினைத் திறந்து பேச வேண்டும். இப்போது இந்த சிரமம் களையப்பட்டு ஒரே விண்டோவில் அனைவருடன் பேசும் வசதி தரப்படுகிறது. இது போன்ற ஒரு குரூப் சேட்டிங் தொடங்க சாட்டிங் செய்து கொண்டிருக்கையில் ஆப்ஷன்ஸ் மெனுவிலிருந்து குரூப் சேட் என்பதனை கிளிக் செய்திடவும். அடுத்தடுத்து வருபவை எல்லாம் ஒரே விண்டோவில் கிடைக்கும்.




* புதிய எமோட்டிகான்கள் (emoticons) : உங்கள் உணர்வுகளை நகைச்சுவையுடன் வெளிப்படுத்த பல புதிய எமோட்டிகான்கள் வடிவமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்களை ஆச்சரியப்படுத்துங்கள். வழக்கமான செமி கோலன் மற்றும் பிராக்கெட் மட்டுமே வைத்து அமைத்திடும் எமோட்டிகான்களிடமிருந்து விடுதலை பெறுங்கள்.




* இலவச ஐ–மேப் வசதி (Free IMAP) : இதன் மூலம் உங்கள் இன் – பாக்ஸில் என்ன மாற்றங்கள் ஏற்படுத்தினாலும் அது நீங்கள் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் அமைகிறது. மொபைல் போன் வழியே இன் – பாக்ஸ் பார்த்தாலும் டெஸ்க் டாப் வழி யேபார்த்தாலும் இந்த மாற்றங்கள் காட்டப்படுகின்றன.




* மற்ற அக்கவுண்ட் இமெயில்கள்: உங்களுக்கு உள்ள வேறு இமெயில் அக்கவுண்ட்டுகளுக்கு வரும் இமெயில் கடிதங்களை கூகுள் மெயிலில் இருந்தே பெற்றுப் பார்க்கலாம். இது போல ஐந்து வேறு வேறு இமெயில் அக்கவுண்ட்களைப் பார்க்க கூகுள் மெயில் அனுமதிக்கிறது.




அவை அனைத்தும் கூகுள் மெயில் அக்கவுண்ட்டிலேயே வைத்துக் கொள்ளவும் செய்கிறது. இவற்றிற்குப் பதிலளிக்க வேண்டுமாயின் அதற்கெனவே தனி ‘from’ address வடிவமைத்துத் தருகிறது. இதனால் பதில் கூகுள் தளத்திலிருந்து வருகிறது என்று அதனைப் பெறுபவர்களுக்குத் தெரியாது. ஆனால் வேறு இமெயில் அக்கவுண்ட்டுகள் அதிலிருந்து உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திடும் வசதி கொண்ட அக்கவுண்ட்டாக இருக்க வேண்டும். வெப் சர்வரிலேயே வைத்துப் பார்க்கும்படியானதாக இருக்கக் கூடாது.

விண்டோஸ் எக்ஸ்புளோரர்


விண்டோஸ் எக்ஸ்புளோரர்

விண்டோஸ் டாஸ்க் மானேஜர் (Windows Task Manager) குறித்துக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனைச் சார்ந்து கண்ட்ரோல்+ஆல்ட்+ டெலீட் என்ற சொல் தொடரும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஏதேனும் கிராஷ் ஆனாலோ, அல்லது வழக்கத்திற்கு மாறாக இயங்கினாலோ, இதனை இயக்கிப் பார்ப்பதுதான் சிறந்த தீர்வு. இதனைத் திறந்து பார்த்து வேறு ஏதேனும் ஒரு புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரின் திறன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு இயங்குகிறதா என்று கவனிக்கவும்.

பெரிய போல்டர்களைப் பார்க்கும் போது அல்லது கரப்ட் ஆன தம்ப் நெயில் படங்கள் அடங்கிய பைல்கள் இருக்கும் போது, எக்ஸ்புளோரர் சற்று பின் வாங்கும். அப்போது உங்கள் பைல் பிரவுசிங் பணி தடைப்படும். முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் செயல்பாடு என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உங்கள் கம்ப்யூட்டருக்கும் இடையே செயல்படும் ஒரு யூசர் இன்டர்பேஸ். டெஸ்க்டாப், போல்டர், விண்டோஸ் என அனைத்தையும் நீங்கள் காண ஒரு பாலமாக இயங்குகிறது. எக்ஸ்புளோரர் மெதுவாக இயங்கும்; ஆனால் கிராஷ் ஆகாது. எனவே தான் விண்டோஸ் தானாக ரீஸ்டார்ட் ஆகாமல், உங்களிடம் அந்த வேலையை எதிர்பார்க்கிறது.

எக்ஸ்புளோரரை நிறுத்த விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் செல்லவும். இதில் Processes என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். இது பார்ப்பதற்குச் சற்று குழப்பமாக இருந்தாலும், இதில் கிடைக்கும் தகவல்கள் எளிமையானவையே. இங்குதான் உங்கள் கம்ப்யூட்டரின் பின்னணியில் இயங்கும் புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படும். சில புரோகிராம்களின் பெயர்கள் வித்தியாசமாக இருக்கும். இதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாம் பார்க்க வேண்டியது Explorer.exe தான். இதனைக் கண்டறிந்த பின், இதன் மீது ஒரு முறை லெப்ட் கிளிக் செய்திடவும். இது ஹைலைட் ஆகும். பின் ரைட் கிளிக் செய்தால் ப்ராசஸ் மெனு கிடைக்கும். அடுத்த ஸ்டெப் எடுக்கும் முன், வேறு விண்டோக்கள் திறக்கப்படவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ளவும். பின் Explorer.exe என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இது எக்ஸ்புளோரர் இயங்குவதை நிறுத்தும். இப்போது உங்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள ஐகான்கள் அனைத்தும் மறைந்து போகும். கவலைப்பட வேண்டாம். அதைத்தான் எக்ஸ்புளோரர் செய்கிறது. இனி விண்டோஸ் இயக்கத்தினை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும். டாஸ்க் மேனேஜரில் ஒரு பைல் மெனு கிடைக்கும். டாஸ்க் மேனேஜரில் மேலாக உள்ள File என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். அடுத்து New Task என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இப்போது Create New Task என்று ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்கு கிடைக்கும் பாக்ஸ், ரன் பாக்ஸ் போல செயல்படும். பாக்ஸில் explorer என்று டைப் செய்து ஓகே கிளிக் செய்திடவும். இனி உங்கள் டெக்ஸ்டாப், அதன் ஐகான்களுடன் காட்டப்படும். ஆஹா! இயங்கி, முடங்கிய ஒரு புரோகிராமினை நிறுத்தி மீண்டும் இயக்கிவிட்டீர்கள். பெரிய அளவில் பைல் பிரவுசிங் செய்து, தளர்ச்சி அடையும் போதெல்லாம், டாஸ்க் மேனேஜர் மூலம் இந்த புத்துணர்ச்சி கிடைக்கும் வேலையை மேற்கொள்ளலாம்.

ஓபன் ஆபிஸ் சாப்ட்வேர் டவுண்லோட்!


ஓபன் ஆபிஸ் சாப்ட்வேர் டவுண்லோட்!

மைக்ரோசாப்ட் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பிற்கு இணையாக அதன் அனைத்து அப்ளிகேஷன்களும் அடங்கியதாக இயங்குவது ஓப்பன் ஆபீஸ் ஆகும். ஆபீஸ் டாகுமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷீட், பிரசன்டேஷன் மற்றும் பல வகையான பைல்களை உருவாக்கவும், பயன்படுத்தவும் இது வழி வகுக்கிறது. இந்த அப்ளிகேஷன் தொகுப்பு உருவாக்கப் பயன்பட்ட புரோகிராம் வரிகளை யாரும் இன்டர்நெட்டிலிருந்து பெறலாம் என்பதால், பல புரோகிராமர்கள் இதனைச் செம்மைப் படுத்தியுள்ளனர். இந்த ஆபீஸ் தொகுப்பிற்கு பல பாராட்டுரைகள் உலகெங்கும் கிடைத்துள்ளன. இது முற்றிலும் இலவசமே. ஆங்கிலத்தில் வரும் கம்ப்யூட்டர் இதழ்களுடன் வழங்கப்படும் சிடிக்களில் இந்த தொகுப்பு தரப்படுகிறது. ஆனால் அவற்றைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. இன்டர் நெட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். டவுண்லோட் செய்திட நீங்கள் அணுக வேண்டிய இணைய தள முகவரி http://download.openoffice.org/other.html