Showing posts with label தகவல். Show all posts

Thursday, 12 January 2012

2038 ல் கம்ப்யூட்டர் பிரச்னை

 2038 ல் கம்ப்யூட்டர் பிரச்னை





2000 ஆண்டு தொடங்கும் முன்னால்,Y2K என்று ஒரு பிரச்னை அனைத்து ஊடகங்களிலும் பேசப்பட்டது. கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்கள், 2000 ஆண்டு தொடங்கும்போது தவறாக தேதியைக் கணக்கிடத் தொடங்கும் என்றும்
இதனால் உலகெங்கும் பல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் பேசப்பட்டது.

பல நிறுவனங்கள் தற்காப்பு நடவடிக்கையாகப் பல வழிகளைக் கையாண்டனர். இறுதியில் எதிர்பார்த்த இழப்புகள் ஏற்படவில்லை. அதற்கான தேவையான மாற்றங்களைப் பல நிறுவனங்கள் தாங்களாக மேற்கொண்டனர்.

இப்போது இன்னொரு பிரச்னை எதிர்பார்க்கப்படுகிறது. இது 2038 ஆம் ஆண்டில் ஏற்படும் என அறியப்பட்டுள்ளது. இந்த பிரச்னைUnix Millennium Bug, Y2K38 அல்லது Y2.038K என அழைக்கப்படுகிறது.

இந்த பிரச்னைக்குக் காரணம் சி புரோகிராமிங் மொழியில் பின்பற்றப்படும் ஒரு செயல்பாடுதான். சி புரோகிராம் ஸ்டாண்டர்ட் டைம் லைப்ரரி என்று ஒரு கோட்பாட்டினைப் பின்பற்றுகிறது. இதில் நேரமானது 4 பைட் பார்மட்டில் கணக்கிடப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி நேரத்தின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.

அதன் அடிப்படையில் கணக்கீடுகள், மாற்றங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.

இந்த 4 பைட் ஸ்டாண்டர்ட் நேரத்தைக் கணக்கிடுகையில், நேரத்தின் தொடக்கத்தினை ஜனவரி 1, 1970 12:00:00 முற்பகல் ஆக எடுத்துக் கொள்கிறது. இந்த நேரத்தில் நேர மதிப்பு 0 எனத் தொடங்கப்படுகிறது.

எந்த ஒரு நேரம் மற்றும் தேதியின் மதிப்பு இந்த 0 மதிப்பிற்குப் பின்னர் விநாடிகளின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே, எடுத்துக் காட்டாக 919642718 என்ற மதிப்பு ஜனவரி 1, 1970 12:00:00 முற்பகலுக்குப்பின் 919642718 விநாடிகள் எனக் கணக்கிடப்படும். அப்படிக் கணக்கிடப்படுகையில் விடை ஞாயிறு, பிப்ரவரி 21, 1999 16:18:38 எனக் கிடைக்கும்.

இது ஒரு வசதியான கணக்கீடு. ஏனென்றால் இரண்டு மதிப்புகளை விநாடிகளில் கணக்கிட்டு இதன் மூலம் நேரம் மற்றும் நாளினைக் கையாள முடிகிறது. இதன் மூலம் இரு வேறு நேரம், நாள், மாதம் ஆண்டுகளைக் கையாள முடியும்.

ஆனால் ஒரு 4 பிட் இன்டிஜர் வழியைப் பின்பற்றுகையில் அதன் வழி சொல்லப்படக் கூடிய அதிக பட்ச மதிப்பு 2,14,74,83,647ஆகும். இங்கு தான் ஆண்டு 2038 என்ற பிரச்னை எழுகிறது. இந்த மதிப்பை நாள் கணக்கில் பார்க்கையில், அது ஜனவரி 19, 2038 03:14:07 ஆக மாறுகிறது. இந்த நாள் அன்று, சி புரோகிராம்கள் நேரம் கணக்கிடுவதில் திணற ஆரம்பிக்கும். ஏனென்றால் இதற்குப்
பின்னர் இந்த புரோகிராம் கள் நெகடிவ் நேரம் காட்டத் தொடங்கும்.

புரோகிராம் எழுதத் தெரிந்தவர்கள், கீழ்க்காணும் சி புரோகிராம் ஒன்றை எழுதி இயக்கிப் பாருங்கள். உங்களுக்கு இதன் பொருள் தெரியும்.

01.#include
02.#include
03.#include
04.#include
05.
06.int main (int argc, char **argv)
07.{
08. time_t t;
09. t = (time_t) 1000000000;
10. printf (“%d, %s”, (int) t, asctime (gmtime (&t)));
11. t = (time_t) (0x7FFFFFFF);
12. printf (“%d, %s”, (int) t, asctime (gmtime (&t)));
13. t++;
14. printf (“%d, %s”, (int) t, asctime (gmtime (&t)));
15. return 0;
16.}

இந்த புரோகிராமின் அவுட்புட்
1.1000000000, Sun Sep 9 01:46:40 2001
2.2147483647, Tue Jan 19 03:14:07 2038
3.2147483648, Fri Dec 13 20:45:52 1901

என அமையும்.

இந்த பிரச்னையை சாப்ட்வேர் கட்டமைப்பைத் திருத்துவதன் மூலம் தீர்த்துவிடலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. பழைய Y2K பிரச்னை போல பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுத்துவிடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சிலர், ஐ.பி.எம். வகை பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இந்த பிரச்னை 2016 ஆம் ஆண்டிலேயே வரும் எனக் கணித்துள்ளனர். ஏனென்றால் இந்த வகைக் கம்ப்யூட்டர்களில் நேரமானது ஜனவரி 1,1980 எனத் தொடங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகைக் கம்ப்யூட்டர்களைத் தான் நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தி வருகிறோம்.

விண்டோஸ் என்.டி. சிஸ்டம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் இந்த பிரச்னை இப்போதைக்கு இல்லை. ஏனென்றால் அவற்றில் நேரத்தைக் கணக்கிட 64 பிட் இன்டிஜர் அடிப்படையாக உள்ளது. மேலும் அதன் கணக்கீடு 100 நானோ நொடிகளை அடிப்படையாகக் கொண்டது.

அதன் நேரம் ஜனவரி 1, 1601 என்பதால், 2184ல் தான் என்.டி. சிஸ்டங்களில் இந்த பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்னை குறித்து ஆப்பிள் நிறுவனம் கூறுகையில் தன் கம்ப்யூட்டர்களில் இந்த பிரச்னைக்கு இடம் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இப்போதைக்கு உள்ள நிலையில், கணக்கீட்டின் அடிப்படையில், மேக் கம்ப்யூட்டர்களில் இந்த பிரச்னை 29,940 ஆம் ஆண்டில் தான் ஏற்படுமாம்

தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக இலங்கை சாதனை!

தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக இலங்கை சாதனை!
 alt

உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் பதிந்து கொள்ள இதன் மூலம் எமக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இதற்கான அனுமதியை 'அய்கன்" (ICANN) வழங்கியதை அடுத்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று 28 ஆம் திகதி கல்கிசை ஹோட்டலில் இடம்பெற்றது.

'அய்கன்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers நிறுவனம் இணையத்தள முகவரிகளைப் பதிவுசெய்து பாதுகாக்கும் இலாபகரமற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மரினா டெல் ரே (Marina Del Rey) நகரத்தை தலைமைப் பீடமாக கொண்ட நிறுவனமாகும்.

'இலங்கை" மற்றும் 'லங்கா" முதலான இணையத்தள முகவரியை பெற்றுக் கொள்வதாயின் www.nic.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.

இந் நடைமுறையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும் இந் நடைமுறையை தற்போது தேசியளவிலேயே பாவிக்க முடியும் எனவும், இன்னும் சில காலத்திற்கு பிறகு சர்வதேச ரீதியில் பாவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஏற்கனவே இணையத்தள முகவரியைப் பதிந்து கொண்டவர்கள் புதிய முறையினை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட புதிய நடைமுறையால் தமது சொந்த மொழியில் இலகுவாக இணையத்தளத்தை எவரும் பயன்படுத்த முடியும்.

உதாரணமாக வீரகேசரி இணையத்தளத்தை பார்வையிடுவதாயின் http://தளம்.வீரகேசரி.இலங்கை என்று தட்டச்சு செய்யலாம்.

இதன் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண எமது வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவிக்கையில்,

"எமது சொந்த மொழியில் இணையத்தள முகவரியை முதன் முதலாக ஆசியாவில் மட்டுமல்ல, முழு உலகிலும் அறிமுகப்படுத்திய பெருமை எமக்கு உண்டு. தாய்மொழியில் இணையத்தள முகவரியை 'இலங்கை' என்று தமிழிலும், 'லங்கா' என்று சிங்களத்திலும், நாம் அறிமுகபப்டுத்தியுள்ளோம்.

அதுவும் முதன் முறையாக தமிழில் இணையத்தள முகவரி உருவாகியுள்ளது இலங்கையில் தான் என்பதும் பெருமைக்குரியதே. இதனூடாக தமிழ் - சிங்கள் மக்களிடையே சமத்துவ நிலைமை உருவாக்கம் பெற்றுள்ளது" என்றார்.

அய்கன் (ICANN) பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான ராம் மோகன் கருத்து தெரிவிக்கும் போது,

"ஆசியாவில் தமிழில் தனது நாட்டின் பெயருடன், உலக இணையத்தள முகவரியை முதன் முதலாக அறிமுகப்படுத்திய ஒரே நாடு இலங்கை தான். இது ஒரு மாபெரும் சாதனை. இதனையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

முதன் முறையாக தாய்மொழியில் இணையத்தளத்தினூடாக, மின்னஞ்சலில் பயணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் அடைந்து கொள்ள இது நமக்கு வாய்ப்பளிக்கின்றது.

இன்று மடி கணினி (லெப்டொப்) யைவிடவும் கையடக்கத் தொலைபேசி மூலமான இணையத்தள பாவனையாளர்கள் அநேகர் உள்ளனர். எனவே எதிர்காலத்தில் 'லங்கா' மற்றும் 'இலங்கை' ஆகிய இணைய முகவரிகள் பிரபல்யம் அடையும் என்பதில் ஐயம் இல்லை" என்றார்.

கணினி வேகமாக துவங்க....


கணினி வேகமாக துவங்க....

நம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…
வழிமுறைகள்:
1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
2. Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.
3. இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.
4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.
5. கிளிக் "OK", "Apply" & "OK",
6. திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.
7. டபுள் கிளிக் "IDE ATA/ATAPI controllers".
8. "Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க.
9. "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.
10. "Secondary IDE channel", Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.
11. கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க

ஸ்பீட் 1 டெரா ஹெர்ட்ஸ் மெமரி 1 ஜெட்டா பைட்


ஸ்பீட் 1 டெரா ஹெர்ட்ஸ் மெமரி 1 ஜெட்டா பைட்



 alt




சில நண்பர்கள் எந்திரன் படம் பார்த்துவிட்டு அது என்ன டெரா ஹெர்ட்ஸ் , ஜெட்டா பைட் என்றால் என்ன என்று கேட்டு மெயில் அனுப்பியிருந்தார்கள்....அவர்களுக்காகவும்..அதை பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்காகவும்.. டெரா ஹெர்ட்ஸ் என்றால் என்ன என்று ஏற்கனவே இந்த ப்ளாகில் விவரித்துள்ளேன் ..

டெரா ஹெர்ட்ஸ்

அடுத்ததாக ஜெட்டா பைட் என்றால் என்ன என்று பார்ப்போம்..

ஒரு தகவலை ஹார்ட்டிஸ்கில் அல்லது மெமரி கார்டில் சேமிக்க எடுத்துகொள்ளும் அளவை பைட்டில்(Byte) கூறுவோம்.

(எ.கா) ஒரு MP3 பாடல் கோப்பை சேமிக்க 5MB இடம் தேவைப்படும்.
1 பிட் என்பது பைனரி எண்ணில் 0 அல்லது 1 ஆக இருக்கும்.
1 பிட் = 0 அல்லது 1
4 பிட் = 1 நிப்பிள் (1nibble)

8 பிட் = 1 பைட்

1024 பைட் = 1 கிலோ பைட் (KB) Kilo Byte

1024 கிலோபைட் = 1 மெகா பைட் (MB) Mega Byte

1024 மெகா பைட் = 1 ஜிகா பைட் (GB) Gega Byte

1024 ஜிகா பைட் = 1 டெரா பைட் (TB) Tera Byte

1024 டெரா பைட் = 1 பீட்டா பைட் (PB) Peta Byte

1024 பீட்டா பைட் = 1 எக்ஸா பைட் (EB) Exa Byte

1024 எக்ஸா பைட் = 1 ஜெட்டா பைட் (ZB) Zetta Byte

1024 ஜெட்டா பைட் = 1 யோட்டா பைட் (YB) Yotta Byte


ஸ்டக்ஸ்னெட்' வைரஸ் : இணையத் தீவிரவாதத்தின் முதல்படி

ஸ்டக்ஸ்னெட்' வைரஸ் : இணையத் தீவிரவாதத்தின் முதல்படி.


உலகின் முதலாவது அதி மேம்பட்ட இணைய ஆயுதம் ஈரானின் அணுச் சக்தி நிலையங்களைத் தாக்க வடிவமைக்கப்பட்டிருக்கலாமென நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கணினி வைரஸான ' ஸ்டக்ஸ்னெட்' இதுவரை உலகில் உருவாக்கப்பட்ட மிகவும் அதிநவீன தீங்கு நிரலாக (மெல்வெயார்) கருதப்படுகின்றது.

உலகம் முழுவதும் சுமார் 45,000 வலையமைப்புக்களை மேற்படி தீங்கு நிரல் தாக்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் ' ஸ்டக்ஸ்னெட்' வைரஸ் கண்டறியப்பட்டது.

எனினும் நாடொன்றின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வைரஸ் ஒன்று இனங்காணப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும்.

' ஸ்டக்ஸ்னெட்' வைரஸானது கணினிகளின் மென்பொருளை மீள் ப்ரோகிராம் செய்யக்கூடியது. மேலும் வேறுபட்ட பல கட்டளைகளைச் செயற்படுத்துமாறு கணினிகளைப் பணிக்கக்கூடியது.

மேற்படி வைரஸானது யு.எஸ்.பி. பென் ட்ரைவர்களினூடாகக் கணினிகளுக்கிடையில் பரிமாற்றப்படக்கூடியது. இதனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக இணையப் பாவனையைக் கட்டுப்படுத்தியுள்ள கணினிகள் கூட ' ஸ்டக்ஸ்னெட்' இற்கு இலக்காகும் சாத்தியமுள்ளன.

இவ்வைரஸ் அதிகமாக சிமென்ஸ் நிறுவனத்தின் மென்பொருட்களையே தேடுகின்றது. பிறகு அதனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றது. இந்த வைரஸானது ஏற்கனவே தனது நாசகார வேலையைத் தொடங்கிவிட்டது.

ஆனால் தற்போதுதான் தங்களுக்கு இது தெரியவந்திருக்கின்றது என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


 

விண்டோஸ் 32 பிட்டா / 64 பிட்டா?



விண்டோஸ் 32 பிட்டா / 64 பிட்டா?



விண்டோஸ் இயங்குதளத்தில் 32 Bit, 64 Bit என இரண்டு வகைப்பட்ட இயங்குதளங்கள் உள்ளது என்பதை நாம் அறிவோம். நாம் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வந்த காலங்களில் நமக்கு இந்த 32 Bit / 64 Bit -ல் எதை
உபயோகிப்பது என்பதைப் பற்றிய யோசனை தோன்றவில்லை.
ஆனால் தற்பொழுது நாம் புதிதாக வாங்கும் மடி கணினிகள் பெரும்பாலும் 64 பிட் விண்டோஸ் 7 இயங்குதளம் நிறுவப்பட்ட நிலையில் தான் விற்பனைக்கு வருகின்றன.


முதலில் உங்கள் விண்டோஸ் 7 இயங்குதளம் 32 பிட்டா அல்லது 64 பிட்டா என்பதை எப்படி அறிய முடியும் என்பதை (பலருக்கு தெரிந்தாலும், புதியவர்களுக்காக) பார்க்கலாம். Start menu வில் Computer -ல் வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள்alt



 

இப்பொழுது திறக்கும் System information திரையில் System Type -ல் உங்களது இயங்குதளம் 32/64 பிட்டா என்பதை அறிய முடியும். alt




சரி! இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? மேலே உள்ள படத்தை கவனியுங்கள், அதில் Installed Memory (RAM) 8 GB. விண்டோஸ் 32 பிட் இயங்குதளங்கள் 4 GB க்கு மேல் நினைவகத்தை ஏற்றுக் கொள்ளாது.

இது கணினியின் நினைவகம் மட்டுமல்ல, நீங்கள் உபயோகிக்கும் வீடியோ கார்டும்தான். 4 GB க்கு மேலாக RAM அல்லது வீடியோ கார்டு பயன் படுத்த வேண்டுமானால் நீங்கள் 64 பிட் இயங்குதளத்திற்குத்தான் மாற வேண்டும்.


மேலும் 32 பிட் மென்பொருட்கள் பெரும்பாலானவை 64 பிட் இயங்குதளத்தில் இயங்கும் ஒரு சில மென்பொருட்கள் உதாரணமாக AutoCAD, 3 D Studio போன்றவைகள் நிச்சயமாக 64 பிட் பதிப்பாகத்தான் இருக்க வேண்டும்.


மற்றொரு முக்கிய செய்தி 64 பிட் என்றவுடன் 32 பிட்டுக்கு அப்படியே இரட்டை வேகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கக் கூடாது.

கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு

கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு




alt/
நீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள்.
ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.
எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.

முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.

வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும்.

இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும்.

இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.

வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள்.

இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.

இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும்.

உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சீடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.

அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்

அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்


கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான டாக்குமெண்ட்களை கையாளுவோம், ஒரு சில பைல் பாமெட் கொண்ட் பைல்களையே அதிகமாக பயன்படுத்துவோம் குறிப்பாக வேர்ட், பிடிஎப், ஆடியோ பைல்கள், வீடியோ பைல்கள்இதுபோன்ற பைல் பார்மெட்களை தான் நாம் அதிகமாக பயன்படுத்தி வருவோம். இதுபோல் அதிகமாக பயன்படுத்தும் பைல் பார்மெட்களுக்கென மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். ஆனால் ஒரு சில பைல்களை அவ்வபோது குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருவோம். அதுபோன்ற பைல்களை காண வேண்டுமெனில் அதற்கென உரிய மென்பொருளை நிறுவினால் மட்டுமே அந்த குறிப்பிட்ட பைலை நம்மால் காண முடியும். இதனால் ஒரு சில டாக்குமெண் ட்களை நம்மால் காண முடியாமலேயே போய்விட கூடிய சூழ்நிலையும் உண்டு. இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக பல்வேறு விதமான பைல் பார்மெட் கொண்ட பைல்களை காண முடியும்.
download here:> freeopener_setup

பல்வேறுபட்ட ஓடியோ கோப்புகளை மாற்றம் செய்வதற்கு


பல்வேறுபட்ட ஓடியோ கோப்புகளை மாற்றம் செய்வதற்கு:

altஓடியோ கோப்புகள் பல்வேறான போர்மட்களில் இணையத்தில் கிடைக்கின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A மற்றும் OGG எனப் பல போர்மட்டுகளில் இவை உள்ளன.

இவற்றில் சிலவற்றை மட்டுமே சில கணணிகளில் இயக்க முடியும். பெரும்பாலான ஓடியோ இயக்கும் புரோகிராம்கள் அனைத்தையும் இயக்குவதில்லை.
எனவே தான் அவற்றின் மீது கிளிக் செய்தவுடன் விண்டோஸ் இதனை இயக்க புரோகிராம் ஒன்றை இணையத்தில் தேடவா என்று கேட்கும். இந்தச் சூழ்நிலையில் இது போன்ற ஓடியோ போர்மட் மாற்றும் புரோகிராம்கள் நமக்குத் தேவையாய் உள்ளன.

இந்த இலவச ஓடியோ மாற்றம் செய்யும் புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி. மேலே குறிப்பிட்ட அனைத்து போர்மட்களையும் இந்த புரோகிராம் கையாண்டு நமக்குத் தேவையான போர்மட்டில் மாற்றித் தருகிறது.

இதே போல பல வீடியோ போர்மட் கோப்புகளில் இருந்து ஓடியோவினை மட்டும் பிரித்தெடுத்து நாம் குறிப்பிடும் கோப்பு போர்மட்டில் தருகிறது. FLV மற்றும் MPEG போர்மட் கோப்புகளில் இந்த சோதனையை நடத்திய போது சிறப்பாக இயங்கியதனை உறுதி செய்திட முடிந்தது.

போர்மட் மாற்றிய ஓடியோ கோப்புகளை ஐ-ட்யூன் வகையில் வேண்டும் என விரும்பினாலும் அப்படியே மாற்றிக் கொள்ளலாம். ஐ-போன், ஐ-பாட் ஆகிய சாதனங்கள் இயக்கும் வகையிலான போர்மட்களிலும் மாற்றிக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஓடியோ கோப்புகளை இணைக்கலாம்.

Free Audio Converter:download here

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?
alt
நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன். 
C  - Common
O  - Oriented
M  - Machine
P  - Particularly
U  - Used for
T  - Trade
E  - Education and
R  - Research


COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research