Showing posts with label Articles. Show all posts

Saturday, 7 January 2012

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு


உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு

குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக scan செய்து வெளியிடலாம். ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும். இதனை image to text converter என்றும் கூறுவர். OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது
1. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை (தாள், PDF கோப்புகள், டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும், மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.
2. மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது.

3. எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23% முதல் 99% வரை தரத்தை உயர்த்தும் வசதிகள் உள்ளது.
4. 200% தொடக்க வேகம்.
5. ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு.
6. OCR Scanner பெரும் நன்மைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு மென்பொருள். நீங்கள் எந்த விதமான scanner மூலமும் இந்த மென்பொருளை எளிதாக உபயோகிக்கலாம். Download செய்ய முகவரி http://www.softwaresfree.net/2011/10/imge-to-text-scanner-free-download.html

உங்கள் இணைய தளத்தினைச் சிறப்பாக அமைத்திடும் வழிகள் சில.


உங்கள் இணைய தளத்தினைச் சிறப்பாக அமைத்திடும் வழிகள் சில.

தங்கள் செயல்பாடுகளை அறிவிக்க நிறுவனங்கள் மட்டுமே இணைய தளம் உருவாக்கி இன்டர்நெட்டில் பதிப்பது என்ற நிலை மாறி தற்போது தனி நபர்களும் மற்றும் அனைத்து வகையான அமைப்புகளும் இணைய தளங்களை உருவாக்கி வருகின்றன. இணைய தளங்களை உருவாக்குவதற்கென்றே பல வெப் மாஸ்டர்கள் உள்ளனர். ஒரு சிலர் இன்டர்நெட்டில் கிடைக்கும் உதவி தகவல்களைக் கொண்டு தாங்களே தளங்களை உருவாக்கி பதிந்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் ஓர் இணைய தளம் ஒரு சில வரையறைகளுடன் அமைக்கப்படுவது நல்லது. அவை என்னவென்று இங்கு பார்ப்போம்.

1. முகப்பு பக்க அளவு:

உங்கள் இணைய தளம் பதிக்கப்பட்டு சில வாரங்கள் ஏன் சில மாதங்கள் வரையில் அல்லது ஓராண்டு காலத்தில் உங்கள் தளத்தின் முகப்பு பக்கம் வழியாகத்தான் அனைவரும் நுழைவார்கள். (பொதுவாக இந்த முகப்பு பக்கத்தினை index.htm அல்லது default.htm என்று அழைப்பார்கள்.) எனவே இதனை அமைப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். முகப்பு பக்கம் லோட் ஆக அதிக நேரம் எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அதனைக் காண விரும்புபவர்கள் எரிச்சல் அடைந்து ஆர்வம் குறைந்து தளத்தைக் காணும் முயற்சியைக் கைவிடுவார்கள். உங்களுடைய தளத்தினைப் பெரும்பாலும் வெளிநாட்டினர்தான் காண விரும்புவார்கள் எனில் இந்த முகப்பு பக்கத்தின் அளவு 90 கேபிக்குள் இருப்பது நல்லது. இதுவே இந்திய மக்கள் தான் காண்பார்கள் என்றால் 50 கேபி என்ற அளவிற்குள் இருப்பது நல்லது. இந்த அளவு எச்.டி.எம்.எல். வழி தகவல், பிளாஷ் மற்றும் அனிமேஷன் ஆகிய அனைத்தும் சேர்ந்திருக்க வேண்டும்.

2. முதல் ஈர்ப்பு:

எந்த பொருளும் மக்களை முதல் பார்வையிலேயே கவர வேண்டும் என்பது பொதுவான ஒரு விஷயமாகும். இன்டர்நெட் தளத்தின் முகப்பு பக்கமும் அப்படித்தான் இருக்க வேண்டும். எனவே உங்களைப் பற்றிய தகவல்கள் நச் என்ற வகையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எளிமையாக அதே சமயத்தில் தளத்தின் உள்ளே சென்று பார்க்கும் வகையில் அமைய வேண்டும்.

3. நேரம்:

இப்போது பிளாஷ் தொகுப்பு உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் இதனைப் பார்ப்பவர்களிடம் வலுக்கட்டாயமாகத் திணிப்பது நல்லதல்ல. இது அதிக நேரம் எடுக்கும். கட்டாயம் பிளாஷ் காட்சி ஒன்று தேவை என்றால் அதனை பார்வையாளர்கள் வேண்டாம் என்று விரும்பினால் ஒதுக்கும் வசதியும் தரப்பட்டிருக்க வேண்டும். வெறும் டெக்ஸ்ட் மட்டும் கூட அழகாக அமைக்கப்படலாம் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தளத்தைக் காண வருபவர்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கும் வசதி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும். உங்கள் தளத்திற்கும் பெருமை சேர்க்கும்.

4. தொடர்பு:

நீங்கள் தரும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். அதனைக் காண்பவர்கள் உங்களிடம் சில விளக்கங்கள் வேண்டி உங்களைத் தொடர்பு கொள்ள எண்ணலாம். எனவே எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என முகப்பு பக்கத்திலேயே குறிப்பிட வேண்டும். உங்கள் மின்னஞ்சல் முகவரி அளிக்கலாம். அல்லது பார்ப்பவரின் கம்ப்யூட்டரில் உள்ள இமெயில் கிளையண்ட் புரோகிராமை இயக்கி நேரடியாக மின்னஞ்சல் அனுப்பும் வசதியையும் ஏற்படுத்தலாம்.

5. புதுமை

ஆம் அதைத்தான் அனைவரும் விரும்புகின்றனர். அடிக்கடி புதிய தகவல்களைக் கொண்டு உங்கள் இணைய தளத்தை புதுப்பித்துக் கொண்டிருங்கள். அதற்காக அடியோடு அதனை மாற்ற வேண்டியதில்லை. சிறிய மாற்றங்கள் அவ்வப்போது இருப்பது உங்கள் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்கும்.

6. சரக்கு

ஆம் உங்கள் நிறுவனம் அல்லது அமைப்பு அல்லது உங்களின் தனிப்பட்ட தளங்களில் தகவல் சரக்கு நிறைய இருக்க வேண்டும். உங்கள் நிறுவனம் எந்தப் பொருளையேனும் தயாரிப்பதாக இருந்தால் அந்த பொருளைப் பற்றி மட்டுமின்றி உங்கள் நிறுவனம் அதன் நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு பற்றியும் நிறைய தகவல்களை நீங்கள் தரலாம்.

7. மேம்பாடு

உங்கள் நிறுவனம் போல, உங்கள் அமைப்பு போல இயங்கும் மற்றவற்றின் இணைய தளங்களையும் நீங்கள் அடிக்கடி சென்று பார்த்து அவர்கள் செய்திடும் மாற்றங்கள், மேம்படுத்தும் தகவல்கள் ஆகியவற்றையும் கண்டறிந்து ஆய்வு செய்து உங்கள் தளத்தையும் அதே போல இல்லாமல் அதைவிடச் செறிவாக மேம்படுத்துங்கள்.

8. சோதனை

உங்கள் இணைய தளம் உங்களுக்குப் பிடித்த பிரவுசரில் மட்டும் சரியாக இயங்கக் கூடாது; மற்ற பிரவுசர்களிலும் மிகச் சரியாக இயங்க வேண்டும். அப்போது தான் அனைத்து தரப்பினரையும் உங்களால் கவர முடியும். அத்துடன் பல்வேறு ரெசல்யூசன் அமைப்பிலும் உங்கள் இணைய தளத்தைச் சோதனை செய்து பார்த்திட வேண்டும். வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இயக்கிப் பார்த்திட வேண்டும்.

9. படங்கள்

நீங்கள் பதித்துள்ள படங்கள் சரியாக இறங்குகின்றனவா, நீங்கள் எதிர்பார்க்கும் தோற்றத்தைத் தருகின்றனவா என்பதை அடிக்கடி நீங்கள் சோதித்து அறிய வேண்டும். வெவ்வேறு வேகத்தில் இயங்கும் இணைய இணைப்புகளில் இந்த படங்கள் எப்படி இறங்கி இயங்குகின்றன என்று சோதித்துப் பார்க்க வேண்டும்.

10. சொல்லும் மொழி

உங்கள் மொழி நடையை ஸ்டைலாக அமைப்பதற்கு முன் அதில் எழுத்து மற்றும் இலக்கணப் பிழை இல்லாமல் இருப்பதனை ஒன்றுக்குப் பல முறை உறுதி செய்து கொள்ளுங்கள். தமிழ் மொழியில் உங்கள் தளத்தில் தகவல்கள் தரப்பட்டால் அந்த எழுத்துருவினை டவுண் லோட் செய்து கொள்ள வசதி செய்து தர வேண்டும். அந்த வசதி உள்ளது என்பதனை ஒரு ஜேபெக் பட பைலாகவோ அல்லது ஆங்கிலத்திலோ அமைக்கலாம்.

11. எழுத்துரு

அனைவருக்கும் தெரிந்த எழுத்துருக்களில் உங்கள் தகவல் தளத்தை அமைப்பது நல்லது. அப்போது தான் பார்ப்பவர்களுக்குத் தாங்கள் பழக்கப்பட்ட தளம் போல உங்கள் தளம் காட்சியளிக்கும்.

12. எளிதான தாவல்

உங்கள் தளத்தின் முகப்பு பக்கத்திலிருந்து தகவல்களுக்காக நேயரை மற்ற தளத்திற்கு இழுப்பது மிக எளிதான ஒன்றாக இருக்க வேண்டும். அவை உடனடியாக இறக்கம் செய்யப்படும் வகையில் தரப்பட வேண்டும். எந்த பக்கத்தில் இருந்தாலும் பிற பக்கங்களுக்குச் செல்வதற்கு எளிதான வழி அமைத்துத் தரப்பட வேண்டும்.

13. விளம்பரம்

உங்கள் இணைய தளம் மூலம் பணம் சம்பாதிப்பதற்காக விளம்பரங்களுக்கு இடம் தருவது தவறில்லை. ஆனால் அவை அளவுக்கு மீறி இடம் பெறக் கூடாது. இரண்டு விளம்பரங்களுக்கு மேல் இருப்பது சகித்துக் கொள்ள முடியாததாக இருக்கும்.

14. பாதுகாப்பு

இணைய தளத்தின் மிக முக்கியமான ஓர் அம்சம் அதன் பாதுகாப்பு. உங்கள் இணைய தளத்தினுள் யாரும் நுழைய முடியாதபடி பாதுகாப்பு வளையங்களை அமைத்து அவற்றை அடிக்கடி மாற்றி மாற்றி அமைத்துவிட வேண்டும்.


உங்கள் இணைய தளப் படங்களை பிறர் திருடாமலிருக்க செய்ய வேண்டியவை

பலரும் தங்களிடம் உள்ள தகவல்கள் மற்றும் அவை சார்ந்த படங்களை இணைத்து இணைய தளங்களை அமைக்கிறார்கள். ஆனால் இந்த தளங்களைப் பார்க்கும் நேயர்கள் இவற்றில் உள்ள படங்களை அப்படியே காப்பி செய்து தங்களுடைய விருப்பப்படிப் பயன்படுத்துகிறார்கள். சிலர் அவற்றை மற்றவர்களுக்கு விற்று விடுகிறார்கள். சிலரோ அவற்றைக் கீழ்த் தரமாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த திருட்டை எப்படித் தடுப்பது? இது குறித்த சில தகவல்களை இங்கு பார்ப்போம். இணைய தளங்களில் பொருத்தப்பட்டு காட்சியளிக்கிற படங்களை காப்பி செய்ய முடியாதவாறு தடுக்க சில வழிகள் உள்ளன. உங்கள் வழிகளை மீறி படங்களைச் சாதாரண பயனாளர்களால் காப்பி செய்ய முடியாது. ஆனால் கம்ப்யூட்டர் விற்பன்னர்களால் காப்பி செய்ய முடியும்.

ரைட்கிளிக் செய்வதை தடுக்க:

பொதுவாக ஓர் இணைய தளத்தில் உள்ள படத்தால் ஈர்க்கப்பட்டவர் அதை காப்பி செய்ய அதை ரைட்கிளிக் செய்வார். மெனு கிடைக்கும். அதில் Save Image As என்பதைப் போன்ற கட்டளை தெரியும். அதை கிளிக் செய்தால், அந்தப் படம் அவர் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படும். எனவே ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தி, ரைட்கிளிக் செய்தால் மெனு கிடைக்காதவாறு செய்து விட வேண்டும். மெனு கிடைக்காததால் Save Image As கட்டளையை அவரால் செயல்படுத்த முடியாது. ரைட்கிளிக் செய்யும் பொழுது கிடைக்கிற மெனுவில் வேறு நல்ல பயனுள்ள கட்டளைகளும் உள்ளன. எனவே ரைட்கிளிக்கால் கிடைக்கிற மெனுவைத் தடுத்துவிட்டால், அந்த நல்ல கட்டளைகளை உங்கள் இணைய தளத்துக்கு வருபவர்களால், உங்கள் வெப் தளத்தில் பயன்படுத்த முடியாமல் போய்விடும். எனவே அவர்களுக்கு எரிச்சல் ஏற்படும். மீண்டும் உங்கள் தளத்துக்கு வரமாட்டார்கள்.

வேறு படத்தை காப்பி செய்யும்படி ஏமாற்ற:

ரைட்கிளிக் செயலை ஜாவாஸ்கிரிப்ட் மூலம் தடுக்கக் கூடாது என்பதை ஒப்புக் கொள்வீர்கள் அல்லவா? Rollover என்ற ஜாவாஸ்கிரிப்ட் அம்சத்தை பயன்படுத்த வேண்டும். யாரும் காப்பி செய்யக் கூடாது என நீங்கள் நினைக்கிற படத்தை வெப் பக்கத்தில் காட்டுங்கள். மவுஸை அந்த படத்தின் மேல் கொண்டு சென்றால் வேறு படம் தெரியும்படி, ஜாவாஸ்கிரிப்டில் Rollover கட்டளையில் கூறிவிடுங்கள். எனவே உங்கள் வெப் பக்கத்தை பார்வையிடுபவருக்கு அந்த படம் தெரியும். ஆனால் அதை காப்பி செய்ய மவுஸை அதன் மேல் கொண்டு போனால் அந்த படம் மறைந்து வேறுபடம் காட்சியளிக்கும். எனவே ரைட் கிளிக் மூலம் காப்பி செய்தால் அந்த புதிய படம்தான் அவர் கம்ப்யூட்டரில் காப்பியாகும். எப்போதும் உங்கள் படம்தான் தெரிய வேண்டும் மவுஸைக் கொண்டு போனவுடன் வேறு படம் தெரியக் கூடாது என நினைத்தால் அதற்கும் வழி உள்ளது. Transparent Gif படத்தை உருவாக்கி கொள்ளுங்கள். பிறகு Embedded style sheet மூலம் அந்த Transparent Gif படத்தின் கீழே உங்கள் படத்தை வைத்து விடுங்கள். உங்கள் படத்தின் மேலே கண்ணாடி காகிதம்போல் Transparent Gif வீற்றிருப்பதால் யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாது. ரைட்கிளிக் செய்து படத்தை காப்பி செய்கிறவர்களுக்கு கண்ணாடி காகிதமான Transparent Gif படமே காப்பியாகும். அதன் கீழேயுள்ள உங்கள் படம் காப்பியாகாது.

படத்தைத் துண்டுகளாக மாற்றி வெப் தளத்தில் போட:

ஒரு படத்தை அப்படியே உங்களது இணையப் பக்கத்தில் வைக்காதீர்கள். அதைப் பல துண்டுகளாகப் பிரித்து அந்த துண்டுகளை வெப் பக்கத்தில் அமைத்திடுங்கள். எனவே உங்கள் படத்தை காப்பி செய்ய விரும்புகிறவர் அந்த துண்டுகளையெல்லாம் காப்பி செய்து பின்பு ஏதாவது இமேஜ் எடிட்டிங் புரோகிராம் கொண்டு அவற்றை ஒட்ட வைக்க வேண்டும். இந்த எரிச்சல் பிடித்த வேலைக்கு பயந்து அந்த துண்டுகளை காப்பி செய்யாமல் விட்டுவிடுவார்கள்.

படத்தினுள் வாட்டர் மார்க்கை நுழைக்க:

படத்தை அப்படியே வெப் பக்கத்தினுள் கொண்டு வரக்கூடாது. அந்த படத்தின் உள்ளே உங்கள் பெயர் அல்லது வேறு ஏதாவது எச்சரிக்கைச் செய்தியை வாட்டர் மார்க்காக நுழைத்து விட வேண்டும். படத்துக்கு இடையூறு இல்லாமல் ஆனால் படத்தை காப்பி செய்பவர்களுக்கு அது பயன்படாதவாறுவாட்டர் மார்க் இருக்க வேண்டும். ஏதாவது இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் கொண்டு வாட்டர் மார்க்கை உருவாக்கலாம். யார் கண்களுக்கும் தெரியாத வாட்டர் மார்க்கை உருவாக்கலாம். இதற்கெனவே சில சாப்ட்வேர்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக Digimare (www.digimare.com) என்ற சாப்ட்வேர் மூலம் கண்ணிற்கு தெரியாத வாட்டர் மார்க்கை உங்கள் படத்தினுள் உருவாக்கலாம். வாட்டர் மார்க் தெரியாததால் எல்லாரும் உங்கள் படத்தை காப்பி செய்யலாம். ஆனால் அப்படி காப்பி செய்தவர்கள் மீது சட்டப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்.

விண்டோஸ் XP தெரிந்ததும்... தெரியாததும்


விண்டோஸ் XP தெரிந்ததும்... தெரியாததும்


ஸ்டார்ட் மெனுவில் புரோகிராம்களுக்கான ஷார்ட் கட்கள் உள்ளன. இவற்றைக் கிளிக் செய்தால் அந்த புரோகிராம்கள் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இவற்றை எண்ணிப் பாருங்கள். ஆறுதான் இருக்கும்.


விண்டோஸ் எக்ஸ்பி தரும் வசதிகள் ஏராளம். ஆனால் அத்தனையும் அனைவராலும் பயன்படுத்தப்படுவதில்லை. பலர் தெரிந்து கொண்டிருப்பதும் இல்லை. எனவே அத்தகைய பயன்பாடுகளில் குறிப்பிட்ட சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இங்கு தருகிறோம்.



1. டாஸ்க்பாரிலிருந்தே மை கம்ப்யூட்டர்ஸ்: பல புரோகிராம்களை இயக்கும் போது புரோகிராம்களின் டேப்கள் டாஸ்க் பாரில் அமர்ந்திருக்கும். அதனைக் கிளிக் செய்து நாம் புரோகிராம்களை இயக்கி பைல்களைக் கையாளலாம். அதே போல மை கம்ப்யூட்டர் போல்டரில் உள்ள அனைத்து துணை போல்டர்களையும் அவற்றின் பைல்களையும் டாஸ்க் பாரில் இருந்தவாறே கையாளலாம். அதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் அல்லது மை கம்ப்யூட்டர் ஐகானை அழுத்துவது மூலம் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. இதற்கு டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் மவுஸின் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடவும். மெனு ஒன்று விரிந்து மேலே வரும்.



அதில் டூல் பார் என்பதனைத் தேர்ந்தெடுத்தால் வரும் பிரிவுகளில் நியூ டூல் பார் என ஒன்று தென்படும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது சிறிய நியூ டூல்பார் என்னும் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் மை டாகுமெண்ட்ஸ் போல்டருக்குச் சென்று அதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இனி டாஸ்க் பாரில் வலது ஓரத்தில் மை டாகுமெண்ட்ஸ் போல்டர் சதுரம் இருக்கும். அதில் உள்ள பைல்களைக் கையாள நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரர் செல்ல வேண்டியதில்லை. இதனைக் கிளிக் செய்தாலே போதும். மொத்த பைல் மெனுவும் கிடைக்கும். இந்த வழியினை விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்திலும் மேற் கொள்ளலாம். விஸ்டாவில் மை டாகுமெண்ட்ஸ் என்பது டாகுமெண்ட்ஸ் என இருக்கும்.


கிராஷ் ஆகும்போது போல்டர்களைக் காப்பாற்ற:விண்டோஸ் எக்ஸ்பியில் பல போல்டர்களைத் திறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கையில் ஏதாவது ஒரு போல்டர் கிராஷ் ஆனாலும் அனைத்தும் கிராஷ் ஆகி மூடப்படும். அதில் சேவ் செய்யப்படாத டேட்டா மற்றும் பைல்களின் கதி அவ்வளவுதான். மற்ற போல்டர்களுக்கு இந்த நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு சிஸ்டத்தில் செட் செய்திடலாம். இது ஒரு மறைக்கப்பட்ட ஆப்ஷனாகத் தரப்பட்டுள்ளது. இதற்கு Control Panel ஐத் திறக்கவும்.



அதில் Folder Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் வியூ டேப் சென்று வரிசையாகக் கிடைக்கும் ஆப்ஷன்ஸ்களை ஸ்குரோல் செய்திடவும். இதில் ‘Launch folder windows in a separate process’ என்பதில் உங்கள் தேடலை நிறுத்தவும். இதில் அடுத்ததாக உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி எப்போதாவது கிராஷ் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட போல்டர் தவிர மற்றவை காப்பாற்றப்படும்.


ஸ்டார்ட் மெனுவில் கூடுதல் புரோகிராம்கள்:ஸ்டார்ட் மெனுவில் புரோகிராம்களுக்கான ஷார்ட் கட்கள் உள்ளன. இவற்றைக் கிளிக் செய்தால் அந்த புரோகிராம்கள் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இவற்றை எண்ணிப் பாருங்கள். ஆறுதான் இருக்கும். அப்படியானால் கூடுதலாக புரோகிராம்களுக்கான சுருக்கு வழிகளை இந்தப் பட்டியலில் அமைக்க வேண்டும் என்றால் என்ன செய்திட வேண் டும். ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்திடுங் கள். கிடைக்கும் மெனுவில் ப்ராபர்ட்டீஸ் கிளிக் செய்து இன் னொரு விண்டோவினைப் பெறுங்கள். இந்த விண்டோவில் கஸ்டமைஸ் பட்டனை அழுத்தவும். புதியதாகத் திறக்கப்படும் டயலாக் பாக்ஸ் நடுவே உள்ள புரோகிராம் செக்ஷனில் Number of Programs in the Start menu என்று இருப்பதனைக் காணலாம்.இதில் அருகே 6 என்று இருக்கும். இதன் மேல் கீழ் அம்புக் குறிகளை அழுத்தி புரோகிராம்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்தலாம் அல்லது குறைக்கலாம். இந்த எண்ணை செட் செய்தபின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்த எண்ணிக்கைக்கேற்ப ஸ்டார்ட் மெனுவில் ஷார்ட் கட்கள் அமைக்கப்படும்.


தனி ஆளுக்கு ஏன் பாஸ்வேர்ட்: நீங்கள் ஒருவர் மட்டுமே உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், அல்லது உங்களுக்கு நம்பிக்கையான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு ஏன் பாஸ்வேர்ட் கொடுத்து கம்ப்யூட்டருக்குள் நுழைய வேண்டும். தேவையில்லையே! எனவே பாஸ்வேர்ட் விண்டோ இல்லாமல் நுழைந்திட Start கிளிக் செய்து Run விண்டோவிற்குச் செல்லவும். அதில் control userpasswords என டைப் செய்திடவும். என்டர் செய்து கிடைக்கும் விண்டோவில் உங்களுடைய அக்கவுண்ட்டைத் தேர்ந்தெடுத்து பின் ‘Users must enter a user name and password to use this computer’ என்று இருக்கும் இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். ஓகே கிளிக் செய்திடவும். பின் பழைய பாஸ் வேர்டையே கொடுத்து பின் மீண்டும் ஓகே கிளிக் செய்தால் அடுத்த முறை பாஸ்வேர்ட் கொடுக்காமலேயே கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம்.


டெஸ்க் டாப்பைப் பெற: பல புரோகிராம்களை இயக்கிக் கொண்டிருக்கையில் டெக்ஸ்க் டாப்பில் உள்ள இன்னொரு புரோகிராமினை இயக்க டெஸ்க் டாப் திறக்கப்பட வேண்டும் என விரும்புவோம். அதற்கு பல வழிகள் உள்ளன. டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் ‘Show the Desktop’’ என்று இருப்பதைக் கிளிக் செய்திட வேண்டும். உடனே டெஸ்க் டாப் திரை கிடைக்கும். மீண்டும் இயங்கிக் கொண்டிருந்த புரோகிராம் வேண்டும் என்றால் அதே போல கிளிக் செய்து Show Open Windows என்று இருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதே செயலை கண்ட்ரோல் +டி அழுத்தியும் கண்ட்ரோல்+எம் அழுத்தியும் மேற்கொள்ளலாம்.


டாஸ்க் பாரில் குரூப் பைல்ஸ்: அடுத்தடுத்து பல பைல்களைத் திறந்து இயக்குகையில் அவற்றின் பெயர்களுடன் கூடிய பட்டன்கள் டாஸ்க் பாரில் இடம் பெறும். புரோகிராம்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது டாஸ்க் பாரில் இட நெருக்கடி ஏற்படும். இதனைத் தவிர்க்க இந்த புரோகிராம்களை குரூப் செய்திடலாம்.


அதாவது வேர்டில் மூன்றுபைல்கள் திறக்கப்பட்டால் அவற்றை ஒரே பட்டனில் அமையுமாறு செய்திடலாம். பட்டனில் பைல்களின் எண்ணிக்கையுடன் புரோகிராம் பெயர் தெரியும். இதற்கு சிஸ்டம் செய்திட வேண்டிய முறை. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். விரியும் மெனுவில் புராபர்ட்டீஸ் பிரிவில் கிளிக் செய்திடவும். ‘Group Similar Taskbar buttons’ என்று லேபில் உள்ளதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.


பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பல தளங்களைத் திறந்தால் அவை அனைத்தும் ஒரே பட்டன்கீழ் இருக்கும். அதில் மவுஸை வைத்து கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் இருந்து உங்களுக்கு வேண்டிய தளத்தைத் தேர்ந்தெடுத்துப் பெறலாம். அதே போல் வேர்டில் பல பைல்களைத் திறந்து செயல்பட்டால் அவை அனைத்தும் டாஸ்க் பாரில் பட்டியலிடப்படும். பட்டனில் கிளிக் செய்து தேவையான பைலையும் தேர்ந்தெடுத்து இயக்கலாம்.


டாஸ்க் பாரில் வெப்சைட் பிரவுசிங் :இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து ஒரு குறிப்பிட்ட முகவரி உள்ள தளத்தைப் பெற வேண்டும் என்றால் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து பின் லோகேஷன் அல்லது அட்ரஸ் பாரில் தள முகவரியை டைப் செய்கிறோம். இந்த சுற்று வழிக்குப் பதிலாக டாஸ்க் பாரிலேயே அந்த தளத்தின் முகவரியை டைப் செய்து பெறும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த வழியை டாஸ்க்பாரில் ஏற்படுத்தலாம். டாஸ்க் பாரில் உள்ள காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். விரியும் மெனுவில் ‘Lock the Taskbar’ என்பதில் டிக் அடையாளம் இருந்தால் எடுத்துவிடவும். பின் கிடைக்கும் கட்டத்தில் டூல்பார்ஸ் என்பதில் மவுஸின் கர்சரை அமைத்தால் என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் கிளிக் செய்தால் அதன் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தப்படும்.



கீழே டாஸ்க்பாரில் கடிகார நேரத்திற்குப் பக்கத்தில் அட்ரஸ் என்று இருக்கும். இதனைக் கிளிக் செய்து மவுஸால் இழுத்தால் ஒரு அட்ரஸ் பார் விரியும். இதில் நீங்கள் காண வேண்டிய வெப் சைட்டின் அட்ரஸை டைப் செய்தால் உடனடியாக அந்த தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அட்ரஸை டைப் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் டைப் செய்தால் ஏற்கனவே பார்த்த இணைய தளங்களின் முகவரிகள் தாமாகவே எழுந்து வரும்; அதில் கிளிக் செய்து வேலையை முடிக்கலாம் என்று சொல்கிறீர்களா? அதே மாதிரி இங்கும் நீங்கள் டைப் செய்கையில் தளத்தின் பெயரை இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பயன்படுத்தியிருந்தால் இங்கும் முழு முகவரியும் கிடைக்கும். அப்படியே அதன் மீது கிளிக் செய்திடலாம்.


ஒலி இல்லாத பிரவுசிங்


இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் சில தளங்களில் பின்னணி இசை மற்றும் வேறு வகையான எச்சரிக்கை ஒலிகள் வரும் வகையில் பைல்களைப் பதித்திருப்பார்கள். தளத்தைப் பார்க்கையில் இந்த ஒலிகள் ஒலிக்கப்பட்டு நம் கவனத்தைத் திருப்பும். அந்த தளம் மூடப்பட்டால் தான் ஒலி நிற்கும். எப்படி இந்த ஒலியை நிறுத்துவது. ஸ்பீக்கரை எடுத்துவிடலாமா? கம்ப்யூட்டரின் உள்ளேயே இணைந்த ஸ்பீக்கர் என்றால் என்ன செய்வது? நிறுத்துவதற்கும் ஒரு செட்டிங் உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து கொள்ளுங்கள். கூணிணிடூண் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Internet Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Advanced என்னும் டேப் பட்டன் மீது கிளிக் செய்திடவும். ஸ்குரோல் வீலை கீழாக இயக்கி Multimedia என்னும் பிரிவிற்குச் செல்லவும்.


இதில் Play sounds in webpages என்னும் பிரிவில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே பட்டன் அழுத்தி வெளியேறவும். இனி இணைய தளங்களைப் பார்வையிடுகையில் தளத்திலேயே உள்ள சவுண்ட் பைல்கள் இயங்கி தேவையற்ற ஒலியைக் கொடுக்காது. மீண்டும் ஒலி தேவை என எண்ணினால் மேலே சொன்ன வழிகளில் சென்று டிக் அடையாளம் நீக்கிய இடத்தில் மீண்டும் அதனை அமைக்கவும்.

வேகமாக இயங்கும் வழிகள்


வேகமாக இயங்கும் வழிகள்

கம்ப்யூட்டரில் என்னதான் வேகமாக    இயங்கும்    இன்டெல் சிப் இருந்தாலும் நாம் பயன்படுத்தும் வழிகளில் சில எக்ஸ்பி சிஸ்டத்தை மெதுவாக்கும்.

என்ன செய்தால் நமக்கு அதிக பட்ச வேகம் கம்ப்யூட்டர் இயக்கத்தில் கிடைக்கும் என்பதனை இங்கு பார்ப்போம்.


1. 
ஹார்ட் டிஸ்க் சரி செய்க: விண்டோஸ் இயக்கம் தன் வேக நிலைக்குக் குறைவான வேகத்தில் இயங்கக் காரணம் ஹார்ட் டிஸ்க்கில் பைல்களைத் தேடுவதில் அதிக நேரம் செலவிடுவதாகும். ஒரு பைலை நாம் இயக்க விரும்பி அதனைக் கம்ப்யூட்டரில் கேட்டு அது நமக்கு இயக்கத்திற்கு வரும் காலத்தை Reponse Time எனக் குறிப்பிடுகிறோம். நாம் உருவாக்கும் மற்றும் அழிக்கும் பைல்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது இந்த கால அவகாசம் உயர்கிறது. இதற்குக் காரணம் அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கில் பைல்களை உருவாக்கி பின் அழித்து மீண்டும் உருவாக்கி எழுதுகையில் பைல்கள் ஒரே இடத்தில் எழுதப்படாமல் பிரித்து பல இடங்களில் எழுதப்படுகின்றன.



இவ்வாறு பிரிக்கப்படுவதனை 
பிராக்மெண்ட் (Fragment) எனக் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட பைல்களை மீண்டும் ஓரளவிற்கு ஒரே இடத்தில் வரிசையாக விண்டோஸ் இயக்கம் எளிதாகத் தேடிப் படிக்கும்படி அமைக்கலாம். இதனை Defragment எனக் கூறுகிறோம். இவ்வாறு அவ்வப்போது அமைத்துவிட்டால் பைல்களைத் தேடி எடுத்துத் தரும் கால அவகாசம் (Reponse Time) குறைந்துவிடும். இந்த செயல்பாட்டை மாதம் ஒரு முறையேனும் மேற்கொள்ள வேண்டும்.



இதற்கு 
Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter என்ற வகையில் சென்று இயக்க வேண்டும். அவ்வாறு இயக்குகையில் எந்த டிரைவில் இந்த செயல்பாட்டை மேற்கொள்ள விரும்புகிறோமோ அந்த டிரைவை மட்டும் தேர்ந்தெடுத்து இயக்கலாம். டிரைவைத் தேர்ந்தெடுத்து பின் Analyze என்பதில் கிளிக் செய்து பின் டிபிராக் செய்திடும்படி கட்டளை கொடுக்கலாம்.


2. 
டிஸ்க் எர்ரர்ஸ் (Disk Errors) : கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தொடங்கி காலம் செல்லச் செல்ல ஹார்ட் டிஸ்க்கில் பழுது ஏற்படுகிறது. தொடர்ந்து ஹார்ட் டிஸ்க்கை சுழற்றி சுழற்றி எழுதுகிறோம். பல முறை ஹார்ட் டிஸ்க்கைப் பயன்படுத்து கையில் அதன் இயக்கத்தில் தலையிடுகிறோம். அவ்வாறு செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கின் பரப்பில் பழுது ஏற்படுகிறது. பழுது ஏற்படும் இடத்தை bad sector என அழைக்கிறோம்.



இது போன்ற இடங்கள் ஹார்ட் டிஸ்க்கின் எழுதும் மற்றும் படிக்கும் வேகத்தைத் தாமதப்படுத்துகின்றன. அல்லது தடை செய்கின்றன. குறிப்பாக டிஸ்க்கில் எழுதுவது மிகச் சிரமமாகிறது. அல்லது இயலாமல் போகிறது. இது போன்று பழுது ஏற்பட்டபின் அந்த மோசமான, எழுதுவதற்கு இயலாத இடங்களை எதுவும் எழுத முடியாத வகையில் குறிப்பிட்டு வைக்க வேண்டும்.



இதனையே detecting and repair disk errors எனக் குறிப்பிடுகின்றனர். இந்த செயலை மேற்கொள்ள Error Checking utility என்று ஒரு வசதியை விண்டோஸ் கொண்டுள்ளது. இதனை இயக்கினால் இந்த வசதி ஹார்ட் டிஸ்க்கில் உள்ள களைக் கண்டறிந்து சிஸ்டம் வேகமாக இயங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறது. இதனை மேற்கொள்ள கீழ்க்காணும் படி செல்லவும்.



My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Explore தேர்ந்தெடுத்தால் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டிரைவ்களும் கிடைக்கும். இதில் எர்ரர் செக் செய்திடத் தேவையான டிரைவினைத் தேர்ந்தெடுத்து கிடைக்கும் மெனுவில் Properties கிளிக் செய்திடவும். இந்த Properties விண்டோவில் Tools என்னும் டேபில் என்டர் அழுத்த அதில் மூன்று பிரிவுகள் கிடைக்கும்.


அவை: Error Checking, Defragmentation மற்றும் Backup ஆகும். இதில் Error Checking பிரிவில் Check Now என்பதில் கிளிக் செய்திடவும். குறிப்பிட்ட டிரைவ் செக் செய்யப்பட்டு பழுதாகி சரி செய்ய முடியாத இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை எழுத இயலாத இடங்களாகக் குறியிடப்பட்டு ஒதுக்கப்படும்.




3. 
இன்டெக்ஸ் வசதி முடக்கம்: கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை பல வகைகளில் அடுக்கலாம். பெயர் வகையில், அதன் அளவு, வகை என இவை உண்டு. இந்த செயல்பாட்டினை Indexing Service எனக் கூறுகின்றனர். இந்த செயல்பாடு கம்ப்யூட்டரின் மைய இயக்கத்தில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது.



இவ்வாறு வகை பிரிக்கப்படுவதனால் நாம் பைல்களைத் தேடி எடுப்பது எளிதாகிறது. ஆனால் விண்டோஸ் செயல்பாட்டின் வேகம் குறைகிறது.




உங்களால் பைல்கள் எங்கிருக்கிறது என்றும் அவற்றை தேடி எடுப்பது உங்களால் மேற்கொள்ளக் கூடிய எளிய செயல் என்றும் நீங்கள் எண்ணினால் இந்த Indexing Service – ஐ முடக்கி வைக்கலாம். இதனால் கம்ப்யூட்டருக்கு எந்த பாதகமும் ஏற்படாது. இதனை முடக்க Start கிளிக் செய்து Control Panel செல்லவும். அங்கு Add/Remove Programs ஐ இருமுறை கிளிக் செய்திடவும். பின் Add/Remove Window Components என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பட்டியலில் Indexing services என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இது ஓரளவிற்கு விண்டோஸ் இயக்க செயல்பாட்டைத் துரிதப்படுத்தும்.


4. 
விண்டோஸ் டிஸ்பிளே செட்டிங்ஸ்:விண்டோஸ் சிஸ்டத்தில் நாம் டெஸ்க்டாப்பில் காண்பதனை அழகாக மெருகூட்டி வைத்திடும் வகையில் பல நகாசு சாதனங்கள் தரப்பட்டிருக்கின்றன. எடுத்துக் காட்டாக நமக்குக் காட்டப்படும் மெனு பட்டியலில் பின்புறத்தில் அழகான நிழல் பட்டுத் தெரியும்படி அமைக்கலாம். மவுஸ் பாய்ண்டரில் சிறிய அளவிலான அனிமேஷன் வரும்படி அமைக்கலாம்.


மவுஸ் பாய்ண்ட்டரையே வாழப்பழம் உரிப்பது போலவும் குதிரை ஒன்று ஓடுவது போலவும் மாற்றலாம். ஆனால் இந்த மாற்றங்கள் சிஸ்டம் இயங்குவதற்குத் தேவையான சக்தியை நிறைய எடுத்துக் கொள்கின்றன. இதனால் சிஸ்டத்தின் முக்கிய செயல்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. எனவே இந்த மாற்றங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த மாற்றங்கள் இல்லாமலும் உங்கள் கம்ப்யூட்டரின் டெஸ்க்டாப் சிறப்பாகவே தோற்றமளிக்கும்.


5. 
போல்டர் பிரவுசிங்: ஒவ்வொரு முறை மை கம்ப்யூட்டர் வழியாக போல்டர்களை பிரவுஸ் செய்திட முயற்சிக்கையில் அவை கிடைக்க சிறிது தாமதமாவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இதற்குக் காரணம் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்புளோரரை நீங்கள் திறக்கையில் ஒவ்வொருமுறையும் தானாகவே நெட்வொர்க் பைல்கள் மற்றும் பிரிண்டர்களைத் தேடி அறிகிறது. இதனால் போல்டர்கள் கிடைக்க தாமதமாகிறது. இதனைச் சரி செய்து பிரவுஸ் செய்திடும் வேகத்தை அதிகப்படுத்த "Automatically search for network folders and printers” என்ற ஆப்ஷனை இயங்காமல் தடுத்து அமைத்திடலாம்.


6. 
எழுத்து வகைகளை எடுத்துவிடுதல்: எழுத்து வகைகள் (Fonts) நம் டாகுமெண்ட்களை அழகாக எழுத நமக்கு உதவுகின்றன. ஆனால் சிஸ்டம் இயங்குவதற்குத் தேவையான சக்தியை இவை நிறைய எடுத்துக் கொள்கின்றன. குறிப்பாக TrueType fonts அதிகமாகவே எடுத்துக் கொள்கின்றன. எனவே நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் எழுத்து வகைகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை இன்னொரு போல்டரில் வேறு பெயரில் (Addl Fonts) வைத்துக் கொள்ளலாம். Control Panel சென்று Fonts போல்டரில் உள்ள இந்த தேவையற்ற Fonts பைல்களை மேலே சொன்னபடி இன்னொரு போல்டரில் காப்பி செய்து வைத்துவிடவும். தேவைப்படும்போது இவற்றை மீண்டும் Fonts போல்டருக்குக் கொண்டு சென்று பயன்படுத்தலாம். எந்த அளவிற்கு குறைக்கிறீர்களோ அந்த அளவிற்கு சிஸ்டத்தின் இயக்க வேகம் அதிகரிக்கும்.


மேற்கண்ட வழிகளுடன் சில புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து அவற்றை இயக்குவதன் மூலமும் விண்டோஸின் இயக்க வேகத்தை அதிகப்படுத்தலாம். ஆனால் இந்த புரோகிராம்களைச் சரியாக இயக்காவிட்டால் அல்லது இவற்றுடன் வைரஸ் போன்ற புரோகிராம்களும் இணைந்து வருவதால் அவற்றை இங்கு குறிப்பிடவில்லை. எனவே மேலே குறிப்பிட்ட வழிகளைப் பின்பற்றி விண்டோஸ் சிஸ்டம் இயங்குவதனை துரிதப்படுத்துங்கள்.

கண்ட்ரோல் பேனல் இரு தோற்றங்கள்


கண்ட்ரோல் பேனல் இரு தோற்றங்கள்


இது குறித்த சிறு குறிப்பு ஒன்றை இந்த பகுதியில் வெளியிட்டிருந்தாலும் பல வாசகர்கள் கண்ட்ரோல் பேனலின் இரு வேறு தோற்றங்கள் குறித்து கேள்விகள் அனுப்பியுள்ளதால் மீண்டும் சற்று விளக்கமாக இங்கு தருகிறேன்.

கண்ட்ரோல் பேனல் விண்டோ நமக்கு இருதோற்றங்களில் கிடைக்கிறது. அவை Classic View மற்றும் Category View என அழைக்கப் படுகின்றன. இந்த இரண்டு வெவ்வேறு தோற்றங்களைக் கொண்டு வழக்கமான கண்ட்ரோல் பேனலில் மேற்கொள்ளக் கூடிய அனைத்து பணிகளைச் செயல்படுத்தலாம்.

ஒன்றுக்கொன்று தோற்றத்தில் தான் வேறுபாட்டினைக் கொண்டுள்ளதே தவிர செயல்பாடுகளில் அல்ல. அதே போல இரண்டு வெவ்வேறு தோற்றங்களுக்கிடையே மிக எளிதாக மாற்றிக் கொள்ளவும் செய்யலாம். முதலில் கிளாசிக் வியூவைக் கவனிப்போம். இதனை நீங்கள் தேர்ந்தெடுத்தால் பலவகையான ஐகான்களுடன் ஒரு விண்டோ கிடைக்கும். இந்த ஐகான்களின் மூலம் அனைத்து பிரிவுகளையும் நீங்கள் அடையலாம்: – Accessibility Options, Date and Time, Printers and Faxes, User Accounts என அனைத்தும் இங்கே தனித்தனியாக உள்ளன. அவற்றைக் கிளிக் செய்வதன் மூலம் இவற்றைப் பெற்று குறிப்பிட்ட வகையில் செட் செய்திடலாம்.

கேடகிரி வியூவில் கிடைப்பதைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் பிரிவுகளை முதல் தோற்றத்திலேயே பெறலாம். இதுதான் கண்ட்ரோல் பேனலின் மிகப் பழைய தோற்றம். இதற்கு எதிர்மாறாக கேடகிரி வியூ என்பது சுருக்கமான ஒரு விண்டோவினைக் கொடுக்கும். இருந்தாலும் கண்ட்ரோல் பேனல் மூலம் வழக்கமாக எதனை எல்லாம் பெறுகிறீர்களோ அவை அனைத்தையும் இதில் பெறலாம். இதில் என்ன பிரச்னை என்றால் சில கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்கள் அல்லது வழிகள் குறிப்பிட்ட வியூவில் கண்ட்ரோல் பேனல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க் கின்றன. அவ்வாறு இல்லை என்றால் அது சிக்கலில் கொண்டு போய்விட்டுவிடும். இருப்பினும் அது எப்போதாவது ஒரு முறை தான் ஏற்படும்.

அதனால் கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு சிறிதளவும் பாதிப்பினை ஏற்படுத்தாது. மேலும் முதலில் கூறியது போல இந்த இரண்டு வியூக்களுக்கிடையே மாறிக் கொள்வதும் எளிதுதான். இதனை எப்படி மேற்கொள்வது என்பதற்குக் கீழ்க்காணும் வழியைப் பின்பற்றவும். முதலில் Start அழுத்தி, Control Panel செல்லுங்கள். மேலாக இடது மூலையில் பார்க்கவும். இதில் “Switch to Category View” அல்லது “Switch to Classic View” என்பதனைப் பார்க்கலாம். இதில் கிளிக் செய்வதன் மூலம் அடுத்த வியூவிற்கு மாறிக் கொள்ளலாம். மாறிக் கொண்டு கண்ட்ரோல் பேனலில் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளையும் இதில் மேற்கொள்ளலாம். 

வைரஸ் புரோகிராம்கள் சரியாகச் செயல்படுகின்றனவா?


வைரஸ் புரோகிராம்கள் சரியாகச் செயல்படுகின்றனவா?


கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள பொதுவான ஒரு பயம் வைரஸ் தான். பல்வேறு வழிகளில், வகை வகையான அழிக்கும் சக்திகளுடன் வரும் வைரஸ்கள் நம் செயல்பாட்டை முடக்கி வைப்பதுடன் நம்மைச் சார்ந்தவர்களின் கம்ப்யூட்டர்களையும் நாசம் செய்திடும் வகையில் பரவுகிறது. கம்ப்யூட்டர்களின் உள்ளே இருக்கும் புரோகிராம் களையும் கெடுக்கிறது.

இத்தகைய வைரஸ்களிடமிருந்து நம் கம்ப்யூட்டர்களைக் காத்திடவும் நமக்கு நிம்மதியான ஒரு வேலைப் பாதுகாப்பினைத் தரவும் அமைந்தவை தான் ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் என அழைக்கப்படும் வைரஸ்களுக்கு எதிரான புரோகிராம்கள்.

பெரும்பான்மையான கம்ப்யூட்டர்கள் இன்று இவை இல்லாமல் இயங்குவதில்லை. அப்படி அமைக்கப்பட்டு இயக்கப்பட்டாலும் குறிப்பிட்ட சில வைரஸ்களை சில ஆண்டி வைரஸ் புரோகிராம்களால் ஒன்றும் செய்திட இயலவில்லை. வைரஸ் புரோகிராம்களின் கட்டமைப்பு அவ்வாறு அமைக்கப்படுகிறது. இருப்பினும் வாடிக்கை யாளர்கள் தரும் அனுபவக் கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் மேம்படுத் தப்பட்டு அதுவரை கண்டுபிடித்து அழிக்க முடியாத வைரஸ்களும் அழிக்கப்படுகின்றன.

ஒரு முறை நண்பர் ஒருவர் மிக நல்ல ஆண்டி வைரஸ் புரோகிராமினை வைத்து கம்ப்யூட்டரை இயக்குவதாகக் கூறிவிட்டு அந்நிலையிலும் எஸ்.வி.சி. ஹோஸ்ட் என்னும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைலைக் குறி வைத்துக் கெடுக்கும் வைரஸ் ஒன்று வந்திறங்கி பைல்களையும் போல்டர்களையும் எக்ஸிகூட்டபிள் பைலாக மாற்றிவிடுவதாக எழுதி இருந்தார். இதற்கு இன்னொரு நண்பர் பதில் கூறுகையில் அவர் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ் புரோகிராமிற்கு அந்த வைரஸ் அகப்படாது என்று கூறிவிட்டு பதிலாக இன்னொரு இலவச ஆண்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்துமாறு கூறினார். அது போலவே பயன்படுத்த வைரஸ் மறைந்தது. வைரஸை நீக்கிவிடுகிறோம்.

நிம்மதியாக மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கி செயல்படுத்தத் தொடங்கி விடுகிறோம். வைரஸை நீக்கும் பணி முடிந்தவுடன் அனைத்துமே முடிந்துவிடுகிறதா? முழுவதுமாகக் கம்ப்யூட்டரிலிருந்து வைரஸ் நீக்கப்பட்டுவிட்டதா? அறியாமல் வேறு டாகுமெண்ட் பைல்களை அழித்தவுடன் அது எங்காவது இருக்காதா என்று தேடி அழித்த பைல்களை மீண்டும் கொண்டு வரும் ரெகவரி புரோகிராம்கள் மூலம் பெற முயற்சிக்கிறோம் அல்லவா? அப்படியானால் இங்கு அழிக்கப்பட்ட வைரஸ் புரோகிராமும் கம்ப்யூட்டரில் தானே எங்காவது இருக்கும். இப்படி என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா? சிந்தனையே பகீர் என வயிற்றைக் கலக்குகிறது. எங்காவது ஒளிந்து இருந்து மீண்டும் வைரஸ் வந்துவிட்டால் என்ன செய்வது? இதனை எப்படி அறிவது? என்ற கேள்விகள் எழுகின்றன.

வைரஸாகச் செயல்பட்ட இ.எக்ஸ்.இ. பைல்கள் நீக்கப்பட்டாலும் அவற்றால் கம்ப்யூட்டரில் உள்ள வேறு பைல்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அப்படியே இருக்கத்தான் செய்கின்றன. முதலாவதாக ரெஜிஸ்ட்ரி என்னும் கம்ப்யூட்டர் இயக்கத்தின் முதுகெலும்பான பைலில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பைல்கள் இயங்குவதற்கான தொடக்க நிலைகளில் வைரஸ் ஏற்படுத்திய மாற்றங்கள் அழியாமல் அப்படியே இருக்கின்றன. கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட டி.எல்.எல். மற்றும் ஐ.என்.ஐ. பைல்கள் (dll’s/inf) அப்படியே தங்கிவிடுகின்றன. இவை சும்மா இருப்பதில்லை; அவ்வப்போது இந்த பைல் இங்கு இல்லை; இதன் இயக்கத்தில் பிரச்னை உள்ளது என்று ஏதாவது தேவயற்ற பிழைச் செய்திகளைத் தந்து எரிச்சல் படுத்திக் கொண்டே இருக்கின்றன. இந்த வகையில் தற்போது இயங்கும் ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் முழுமையாகச் செயல்படுவதில்லை என்பது உண்மையே. இதற்கு நாம் தொடக்கத்திலிருந்தே சில செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றைக் காணலாம்.

1. வைரஸ் கம்ப்யூட்டரில் உள்ளது என்று தெரிந்தவுடன் முதலில் நெட்வொர்க்கிலிருந்து கம்ப்யூட்டரை கழட்டிவிடுங்கள். அலுவலகத்தில் உள்ள நெட்வொர்க் மட்டுமின்றி இன்டர்நெட்டிலிருந்தும் எடுத்துவிடுங்கள். இங்கு கழட்டி விடுங்கள் என்று சொல்வது நிஜமாகவே அதன் கேபிள்களை எடுத்துவிடுவதுதான். எனவே இன்டர்நெட் இணைப்பை டிஸ்கனெக்ட் செய்தால் மட்டும் போதாது. கேபிள்களையும் எடுத்துவிடுங்கள். யு.எஸ்.பி. டிரைவ், வெளியே இருந்து இணைத்து செயல்படும் ஹார்ட் டிஸ்க்குகள், சிடி ட்ரைவில் உள்ள சிடி என அனைத்தையும் நீக்குங்கள். ஏனென்றால் இவை வழியாக உங்கள் கம்ப்யூட்டரில் புகுந்த வைரஸ் மற்ற கம்ப்யூட்டர்களுக்குச் செல்லும்.

2. இப்போது கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராமை இயக்கி கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடுங்கள். சி டிரைவ் மட்டுமல்ல; அனைத்து டிரைவ்களையும் நிதானமாக ஸ்கேன் செய்திடுங்கள். இதற்கு உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் தொடர்ந்து இன்டர்நெட் வழியாக அப்டேட் ஆகி இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவ்வாறு செய்த பிற கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இங்கே பயன்படுத்த வேண்டும். இது சரியாக வரவில்லை என்றால் வேறு வழியின்றி இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்தி அப்டேட் செய்து பின் இணைப்பை நீக்குங்கள்.

3. இனி ஸ்கேன் செய்கையில் ஆண்டி வைரஸ் புரோகிராம் வைரஸ்களைக் கண்டுபிடித்து கிளீன் செய்திடவா? அழிக்கவா? குவாரண்டைன் என்னும் இடத்தில் வைக்கவா? என்று கேட்கும். இதில் மூன்றாவதுதான் நல்லது. ஏனென்றால் பைல் அழிக்கப்பட்டாலும் வைரஸ் பல இடங்களில் பதுங்கி இருக்கும்.வேறு ஏதாவது செயல்பாட்டின் போது மீண்டும் இயங்கத் தொடங்கலாம். எனவே குவாரண்டைன் எனப் போட்டுவிட்டால் அது எந்நிலையிலும் இயங்காது. இதற்காக ஆண்டி வைரஸ் புரோகிராம் செட்டிங்க் செய்திடுகையில் “Always quarantine the file” என்னும்படி செட் செய்திடலாம். இதனால் குறிப்பிட்ட வைரஸ் பைலின் பெயர், அது எந்த பைலில் மாற்றங்களை மேற்கொள்கிறது என்று எளிதாகப் பார்க்கலாம்.

4. சில வேளைகளில் உங்களுடைய ஆண்டி வைரஸ் புரோகிராம் குறிப்பிட்ட வைரஸ் அல்லது வைரஸ் பாதித்த பைலை அணுக முடியவில்லை (“Access is denied”) என்று செய்தி தரலாம். அப்படியானால் அதனால் இயங்கமுடியவில்லை என்றே பொருள். உடனடியாக ஸ்கேன் செய்வதனை நிறுத்தி “boot time scan” என்ற ஸ்கேனிங் தொடங்குங்கள். இது கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து விண்டோஸ் இயங்குமுன் இயங்கத் தொடங்கிவிடும். இதனால் வைரஸ்கள் உட்பட எந்த புரோகிராமும் இயங்காது. அதே நேரத்தில் ஆண்டி வைரஸ்புரோகிராம் தன் பணியைச் செவ்வனே செய்திடும் வாய்ப்பு கிடைக்கிறது. வைரஸ்கள் அழிக்கப்பட்ட பின் System Restore பகுதியில் அமர்ந்து கொள்ளும். பல ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் தானாக அந்த பகுதியில் சென்று வைரஸ் இருக்கிறதா என்று தேடாது. நாமாகத்தான் அதனை சிஸ்டம் ரெஸ்டோர் பகுதியிலும் தேடும்படி செய்திட வேண்டும். எனவே “boot time scan” இயக்கம் இந்த பிரச்னையைத் தீர்த்து அனைத்து பகுதிகளிலும் தேடும்.

5. ஸ்கேனிங் முடிந்துவிட்டால் உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ் எதுவும் இல்லாத நிலையை அடைந்துவிட்டது என்று பொருள். இனி குவாரண்டைன் பகுதிக்குச் சென்று எந்த மாதிரி வைரஸ் இருந்தது; அது எந்த பகுதிகளில் சேதம் விளைவித்தது என்று அறியலாம். தவறிப் போய் கூட எந்த பைலையாவது “Restore” அல்லது கட் / காப்பி / பேஸ்ட் செய்திவிடாதீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் உங்கள் டேட்டா பைல்கள் மற்றும் புரோகிராம்கள் வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்கும். பொதுவாக இப்போது வரும் வைரஸ்கள் அழிக்கும் பணியில் இயங்காமல் உங்களிடம் உள்ள உங்கள் பெர்சனல் தகவல்கள், கிரெடிட் கார் ட் எண், பாஸ்வேர்ட் போன்றவற்றைப் பெறும் வகையிலேயே அமைக்கப்படுகின்றன.

6. வைரஸ்களை நீக்கியபின் என்ன செய்ய வேண்டும்? இனிமேல் தான் வைரஸ் ஏற்படுத்திய மாற்றங்களைக் கண்டு சரி செய்திடும் பணியினை மேற்கொள்ள வேண்டும். இப்போது வைரஸ் இல்லை என்பதால் துணிச்சலுடன் இந்த செயலில் இறங்கலாம். குவாரண்டைன் சென்று வைரஸின் பெயர் அல்லது பாதித்த பைல் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த பெயர் அல்லது அதன் அழிவு வேலை குறித்த குறிப்புகள் தாங்கி வரும் டெக்ஸ்ட்டை அப்படியே காப்பி செய்து கூகுள் அல்லது நீங்கள் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ் புரோகிராம் தந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் தேடும் பகுதியில் சென்று பேஸ்ட் செய்து தேடவும். இதற்கான குறிப்புகள் விலாவாரியாகத் தரப்பட்டிருக்கும். கூகுள் வழி சென்றால் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவம் மற்றும் செம்மைப் படுத்தும் வழிகள் தரப்பட்டிருக்கும்.

7.பெரும்பாலும் ரெஜிஸ்ட்ரியில் வைரஸ் ஏற்படுத்திய வரிகளை நீக்க வேண்டியதிருக்கும். இதனை உங்களால் மேற்கொள்ள இயலாது என்று தோன்றினால் பல தளங்களில் இலவசமாக ரெஜிஸ்ட்ரி கிளீனிங் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றை இறக்கிப் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பைல்களை மட்டும் மீண்டும் ஸ்கேன் செய்திடலாம். பல ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் குறிப்பிட்ட சில வகை வைரஸ்களை கண்டுகொள்ளாது.

எனவே இந்நிலையில் இன்னொரு ஆண்டி வைரஸ் புரோகிராமினை இயக்குவது நல்லது. அல்லது இணையத்திலிருந்து இறக்காமல் பைல்களை ஸ்கேன் செய்து தரும் ஆன் லைன் பைல் ஸ்கேனர்களைப் பயன்படுத்தலாம். இவ்வகையில் பல இருந்தாலும் காஸ்பர் ஸ்கை ஆன்லைன் ஸ்கேனர் சிறப்பாக இயங்குகிறது. இதனை www.kaspersky.com/scanforvirus என்ற தளத்தில் பெறலாம். இறுதியாக உங்களால் நேரமின்மையோலா உங்கள் திறமை மீது நம்பிக்கை இல்லை என்றாலோ உடனே ஒரு டெக்னீஷியனை அழைத்து வைரஸ் நீக்கி பின் மற்ற பின் இயக்க வேலைகளையும் மேற்கொள்ளச் செய்யவும்.

லேப்டாப் வாங்கப் போறீங்களா?


லேப்டாப் வாங்கப் போறீங்களா?


அதிகமான விலை, கூடுதலான கவனத்துடன் கையாள வேண்டிய நிலை, தூக்கிச் செல்லும் சுமை, ஒத்துழைக்காத பேட்டரி, ஆண்மையை இழக்கச் செய்திடும் தொடர் பயன்பாடு, ரிப்பேர் ஆனால் சரி செய்ய முடியாது என்றெல்லாம் உண்மையும் பொய்மையும் கலந்த காரணங்களால் ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட லேப் டாப் கம்ப்யூட்டர்கள் இன்று பலரின் முதுகோடு முதுகாக அமையும் தோழனாக உரு மாறி அனைவரும் விரும்பும் சாதனமாக அமைந்து விட்டது.

டெஸ்க்கில் வைத்துப் பயன்படுத்துவோர் கூட இவ்வளவு பெரிய சி.பி.யூ டவர், மானிட்ட ரெல்லாம் எதற்கு? லேப்டாப்பே வைத்துக் கொள்வோமே என்று எண்ணும் அளவிற்கு லேப் டாப் என்னும் மடிக் கம்ப்யூட்டர்கள் (மடியில் வைத்து பயன்படுத்தும் மடித்து எடுத்துச் செல்லக் கூடிய கம்ப்யூட்டர்கள்) இன்று பிரபலமாகி உள்ளன.

இன்று மார்க்கட்டில் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் லேப்டாப் கம்ப்யூட்டருக்கு வரும் விளம்பரங்கள் தான் அதிகம். பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தச் சந்தையில் கூடுதல் இடத்தைப் பிடிக்க போட்டி போட்டு வருகின்றன. எச்.பி, டெல், தோஷிபா, சோனி, லெனோவோ, ஏசர்,காம்பேக் என பல பிராண்டுகளின் மாடல்கள் எங்களிடம் இல்லாத வசதியா என தம்பட்டம் அடிக்கின்றன. திரை அளவு, எடை மற்றும் புராசசர் ஆகியவை குறித்து பல அளவுகளைத் தெரிவிக்கின்றன. முதன் முதலாக லேப் டாப் வாங்க முடிவெடுக்கும் ஒருவர் இவர்களின் விளம்பரத்தைப் பார்த்து எந்த முடிவிற்கும் வராமல் குழப்பத்தில் ஆழ்ந்து போகிறார்.

இந்த தகவல்களை எப்படி அலசி ஆய்வு செய்து தனக்கு வேண்டிய சரியான லேப்டாப்பினை முடிவு செய்ய இயலாதவர்களாக பலர் உள்ளனர். இத்தகையவர்கள் முதலில் என்ன முடிவுகளை வரையறை செய்திட வேண்டும் எனப் பார்க்கலாம். கீழே தரப்பட்டுள்ளவை அனைத்துமே பொதுவான அனைவருக்கும் தெரிந்தது தான் நீங்கள் எண்ணினால் நல்லதை நினைத்துப் பார்ப்பது சிறந்தது என எடுத்துக் கொள்ளுங்கள்.

1. விலையும் பணியின் தன்மையும்: முதலில் இன்ன விலை என பட்ஜெட் போட்டுக் கொள்ளுங்கள். ரூ.30,000 முதல் ரூ.90,000 வரை பல மாடல்கள் உள்ளன. விலையை நிர்ணயம் செய்கையில் வரி, வாரண்டி காலம், கூடுதல் வாரண்டி என்றால் கட்ட வேண்டிய தொகை என்பதனையும் சேர்த்து கணக்கிடுங்கள். சிறிய நகரங்களில் இருந்தால் லேப் டாப் வாங்கிட பெரிய நகரத்திற்குச் சென்று திரும்பும் செலவினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

2. வேலை என்ன? அடுத்து என்ன வேலையை இந்த லேப் டாப் மூலம் மேற்கொள்ளப் போகிறீர்கள் என்று பார்க்கவும். செலிரான் பிராசசர் கொண்ட குறைந்த மெமரி கொண்ட லேப் டாப் தேர்ந்தெடுத்து அதில் போட்டோ ஷாப் மற்றும் படங்கள் எடிட்டிங் அடிக்கடி மேற்கொள்ளப் போகிறீர்கள் என்றால் சிரமமாகும். எனவே விலையை உங்கள் வேலையின் தன்மையை இணைத்து நிர்ணயம் செய்திடவும்.

3. அளவும் எடையும்: ஸ்கிரீன் அளவு மற்றும் எடையின் அடிப்படையில் லேப் டாப் கம்ப்யூட்டர்களை வகைப்படுத்துகின்றனர். 13,14,15 மற்றும் 17 அங்குல திரை கொண்ட லேப்டாப்கள் உள்ளன. சிறிய திரை கொண்டது எடை குறைவாக இருக்கும்; எடுத்துச் செல்வது எளிது. பேட்டரியின் லைப் வெகு நாட்கள் இருக்கும். 17 அங்குல திரை கொண்ட லேப் டாப் என்றால் செயல்பாடு நன்றாக இருக்கும். எடையும் விலையும் எடுத்துச் செல்வதும் சற்று சிக்கலாக இருக்கும். 14 மற்றும் 15 அங்குல திரை கொண்ட லேப் டாப்கள் இவற்றை அட்ஜஸ்ட் செய்து போவதாக இருக்கும்.

4. பிராசசிங் திறன், ஹார்ட் டிஸ்க் அளவு,மெமரி மற்றும் கிராபிக்ஸ் திறன்: இன்டெல் ஒவ்வொரு ஆறு மாத காலத்தில் ஏதேனும் ஒரு புதிய சிப் பிராசசரை அறிமுகப்படுத்துகிறது. குறைந்தது டூயல் கோர் சிப் லேப்டாப்பில் இருக்கவேண்டும். எனவே இன்டெல் நிறுவனத்தின் டூயல் கோர் 2 சிப் அல்லது ஏ.எம்.டி. எக்ஸ்2 பிராசசர் இருக்க வேண்டும். சிங்கிள் கோர் பிராசசர் என்றால் ஏற்றுக் கொள்ளவே வேண்டாம். அவை எல்லாம் காலாவதியாகி விட்டன. அடுத்து எந்த அளவில் ஹார்ட் டிஸ்க் இருக்க வேண்டும். பட்ஜெட் விலையில் கிடைக்கும் லேப்டாப்களில் கூட 160 ஜிபி ஹார்ட் டிஸ்க் உள்ளது. பலருக்கு இது போதுமானது. எனவே உங்கள் லேப்டாப்பில் குறைந்தது இது இருக்க வேண்டும். அடுத்ததாக ராம் மெமரி; பல லேப் டாப்களில் இது 1 ஜிபியாக இருக்கிறது. ஆனால் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்பாட்டிற்கு இது சரியாக அமைய வில்லை. எனவே 2 ஜிபி சிஸ்டம் மெமரி உள்ளதாகப் பார்க்கவும்.

டிஸ்கிரீட் கிராபிக்ஸ் (Discrete Graphics): என்வீடியா மற்றும் ஏ.டி.ஐ (Nvidia’s/ATI) வழங்கும் கிராபிக்ஸ் வசதிகளை இந்த சொற்களால் குறிப்பிடுகின்றனர். இதில் என்வீடியா தான் இன்றைக்கு முன்னணியில் உள்ளது. இன்டெல் நிறுவனம் தரும் இன்டக்ரெய்டட் சொல்யூசன்ஸ் சாதாரண கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு மட்டுமே சரியாக இருக்கும்.

5.பேட்டரியின் திறன்: பொதுவாக பேட்டரிகளை அது கொண்டுள்ள செல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அளவிடுவார்கள். 4 செல் கொண்ட பேட்டரி லேப் டாப்பின் எடையை வெகுவாகக் குறைத்துவிடும்; ஆனால் பேட்டரி லைப் மிகவும் குறைந்துவிடும். 9 செல் பேட்டரி எடையை மிக அதிகமாக்கும். ஆனால் அந்த அளவிற்கு செயல் திறன் பெரிய அளவிலான வேறுபாட்டில் இருக்காது. எனவே 6 செல்கள் கொண்ட பேட்டரி தான் அனைவரும் விரும்பும் பேட்டரியாகவும் பல லேப்டாப்கள் கொண்டதாகவும் உள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இரண்டரை மணி நேரம் லேப்டாப்பைப் பயன்படுத்தலாம்.

6. மற்றவற்றுடன் தொடர்பு: இது பல வகை தொடர்பினை உள்ளடக்கியது. யு.எஸ்.பி., ஈதர்நெட் மற்றும் பயர்வயர். பெரும்பாலான லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ஸ்டாண்டர்டாக சிலவற்றை ஒருங்கிணைந்த வடிவமைப்பில் தருகின்றனர். இருப்பினும் 3 யு.எஸ்.பி. போர்ட் உள்ளது மிக நல்லது. அத்துடன் விஜிஏ / டிவிஐ (VGA/DVI) போர்ட் இருக்க வேண்டும். வயர்லெஸ் கனெக்டிவிடி பக்கம் பார்த்தால் 802.11 a/b/g கட்டாயமாகத் தேவை. இதனை 802.11n க்கு மேம்படுத்த முடியும் என்றால் நிச்சயம் அதனையே கேட்கவும். இதனால் ஸ்பீட் அதிகமாகக் கிடைக்கும். புளுடூத் 2.0 ஈ.டி.ஆர். தரப்படுவதும் நல்லது. இதன் மூலம் போன் போன்ற சாதனத்துடன் பைல்களைப் பரிமாறுவது எளிதாகும்.

7. வாரண்டி: அனைத்து லேப்டாப்களும் குறைந்தது ஓராண்டு வாரண்டி தருகின்றனர். இது ரிப்பேர் மற்றும் தயாரிப்பில் காணப்படும் தவறுகளுக்கு பொறுப்பேற்கின்றன. இந்த காலத்திற்குப் பின் பிரச்னை வந்து ரிப்பேர் செய்திடப் போனால் எக்கச் சக்க செலவாகிறது. இந்த அதிர்ச்சி பின்னாளில் ஏற் படாமல் தடுக்க நீட்டிக் கப்பட்ட வாரண்டி தருவதாக இருந்தால் கேட்டு வாங்கவும். அல்லது தொடக்க வாரண்டியே மூன்று ஆண்டுகள் இருந்தால் கேட்டு வாங்கலாம்.

சரி வாங்கிவிட்டீர்களா! அடுத்து என்ன செய்திட வேண்டும்?

1. கிராப் வேர்களை (crapware) நீக்குங்கள்: முதல் முதலில் உங்கள் லேப்டாப்பினை இயக்கத் தொடங்கியவுடன் நிறைய சோதனை புரோகிராம்கள், தேவையற்ற பவர் மேனேஜ் மெண்ட் புரோகிராம்கள், புரடக்டிவிடி டூல்ஸ் என்ற பெயரில் நமக்கு என்றும் பயன்படாத புரோகிராம்கள் எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் தயாரிப்பாளருக்கு பிடிக்கும் என்பதால் மொத்தமாகப் பதிந்திருப்பார்கள். இவை அனைத்தையும் அன் இன்ஸ்டால் செய்து நீக்கி விட்டு உங்களுக்குப் பிடித்த புரோகிராம்களை மட்டும் இன்ஸ்டால் செய்திடவும்.

2. பேட்டரி பராமரிப்பு: பொதுவாக லேப்டாப் பேட்டரிகள் எல்லாம் எப்படி பயன்படுத்தினாலும் சரியாகவே இயங்கும். எளிதாக வீணாகிப் போகாது. இருந்தாலும் இவை கெட்டுப் போகாமல் இருக்க 2அல்லது திறன் இழக்காமல் இருக்க குறிப்பிட்ட கால கட்டத்தில் பேட்டரியை முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்திட வேண்டும். மேலும் ஓரடியாக பேட்டரியை சார்ஜ் செய்திடக் கூடாது. நீங்கள் லேப் டாப் பயன்படுத்த வில்லை என்றால் மெயின் பிளக்கிலிருந்து பேட்டரிக்கான கனெக்ஷனை எடுத்துவிட வேண்டும்.

மேலே கூறப்பட்டவை எல்லாம் சில அடிப்படை செய்திகளே. எந்த ஒரு லேப் டாப் வாங்குவதாக இருந்தாலும் அவற்றின் திறன் கொண்ட மற்ற லேப் டாப்களுடன் ஒப்பிட்டு, பயன்பாடு குறித்து அவற்றின் இணையதளங் களில் தகவல்கள் தேடி பின் வாங்கவும். வாங் குவதற்கு முன் லேப் டாப் விற்பனை செய் பவரின் நிறுவனமும் நிலையானதுதானா என்று பார்க்கவும். அல்லது இணைய தளங்களில் குறிப்பிட்ட நிறுவனத்தின் அத்தாட்சி பெற்ற முகவர்களின் முகவரிகள், அதே நிறுவனங்களின் கிளைகள் பட்டியல் இருக்கும்.

அவற்றை பெற்று தொடர்பு கொண்டு வாங்கலாம். லேப் டாப் கம்ப்யூட்டர்களை பெர்சனல் கம்ப்யூட்டர்களை ரிப்பேர் நாம் பழுது பார்ப்பது போல பார்க்க முடியாது. மிக நுண்மையான சாதனமாகும். எனவே ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நீங்களே கையாளும் எண்ணத்தை விட்டுவிட்டு அதற்கான் நிறுவன அலுவலகத்திற்குச் செல்லவும். தகுதி கொண்ட டெக்னீஷியனிடம் மட்டுமே காட்டவும்.

வைரஸ் புரோகிராம்கள் எப்படி இயங்குகின்றன?


வைரஸ் புரோகிராம்கள் எப்படி இயங்குகின்றன?

பெர்சனல் கம்ப்யூட்டர்கள் வைத்திருப்போர் ஆண்டி வைரஸ் புரோகிராம்களைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்திருக்கிறர்களோ இல்லையோ அவற்றைப் பற்றி நிச்சயம் கேட்டிருப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் வைரஸ்கள் பெருகுவதும் அதிகரித்து உள்ளது; அவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளும் கூடுதலாகி உள்ளன.

இந்த போராட்டத்தில் வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளை விற்பனை செய்திடும் நிறுவனங்களும் தாங்கள் எப்படி மற்றவர்களைக் காட்டிலும் சிறந்த தொகுப்பினை அளிக்கிறோம் என்பது குறித்து தொடர்ந்து விளம்பரங்களை அளித்து வருகின்றன. இந்த பல முனைப் போராட்டம் கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் இருக்கும் வரை நடந்து கொண்டு தான் இருக்கும் . இந்த கட்டுரையில் ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் எந்த வழி வகைகளில் வைரஸ்களைக் கண்டறிந்து அழிக்கின்றன; கம்ப்யூட்டரைப் பாதுகாக்கின்றன என்று காணலாம்.

அடிப்படைச் செயல்பாட்டின் முதல் கட்டமாக ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் உங்கள் டவுண்லோடிங் புரோகிராம்களையும் இமெயில்களையும் ஸ்கேன் செய்த பின்னரே கம்ப்யூட்டரில் ஏற்றுக் கொள்கின்றன. இவ்வாறு ஸ்கேன் செய்திடுகையில் அவை என்ன எதிர்பார்க்கின்றன? ஸ்கேன் என்பது இங்கு எதனைக் குறிக்கிறது? இந்த புரோகிராம்கள் மேற்கொள்ளும் ஸ்கேன் செயல்பாட்டினை இரண்டு வகைகளாகக் குறிப்பிடுகின்றனர். அவை – “Specific” மற்றும் “Generic” . ஒவ்வொரு ஆய்வும் குறிப்பிட்ட வகை வைரஸ் குறியீடுகளை எதிர்பார்த்து மேற்கொள்ளும் ஸ்கேன் செயல்பாடுகளாகும்.

ஆண்டி வைரஸ் புரோகிராமில் முதல் பாதுகாப்பு வளையத்தில் வைரஸ் குறித்த விளக்க குறியீடுகள், சிக்னேச்சர் என்று சொல்லப்படும் குறியீடுகள் மற்றும் அப்டேட்டட் பைல் தரும் தகவல்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. இவற்றில் எதிர்பார்க்கப்படும் வைரஸ் புரோகிராமில் இருக்கக் கூடிய குறியீடுகள் இருப்பதனால் அவற்றுடன் டவுண்லோட் ஆகும் புரோகிராம் அல்லது இமெயில் மெசேஜ்களில் இந்த குறியீடுகள் இருக்கும் பட்சத்தில் அவை ஒதுக்கப்படுகின்றன. இதனைத்தான் “Specific” ஸ்கேனிங் எனக் குறிப்பிடுகிறோம்.

ஒத்த குறியீடுகள் உள்ள வைரஸ் புரோகிராம்களை உணர்ந்து அறியும்போது அந்த கட்டமைப்பு அப்படியே ஆண்டி வைரஸ் புரோகிராமில் பதியப்பட்டு அடுத்த ஸ்கேனிங் போது பயன்படுத்த வைக்கப்படுகிறது. இதனை ஒத்து வரும் பிற புரோகிராம்கள் கண்டறியப்பட இவை பெரிதும் உதவுகின்றன. வைரஸ் எப்படி அமைக்கப்படலாம் என்று குறியீடு எழுதுவதனையே வைரஸ் விளக்கக் குறியீடுகள் எனக் குறிப்பிடுகிறோம். இவை ஏற்கனவே அறியப்பட்ட வைரஸ் புரோகிராம்களின் குறியீடுகளுக்குத்தான் பயன்படுத்த முடியும். புதிய குறியீடுகளின் அடிப்படையில் எழுதப்படும் புதிய வைரஸ் புரோகிராம்களை எப்படி கண்டறிவது? புதிய வைரஸ்கள் புற்றீசல் போல் பெருகுகின்றன.



இவற்றை என்று அடையாளம் கண்டறிந்து ஒத்த குறியீடுகளை எழுதி அழிப்பது?


இங்கு தான் “Generic” ஸ்கேனிங் உதவுகிறது. இந்த வகை ஸ்கேனிங் முறையில் ஒத்துப் போகக் கூடிய குறியீடுகளை மட்டும் தேடாமல் சந்தேகப்படும் குறியீடுகளும் தேடப்படுகின்றன. ஆய்வு செய்யப்பட்ட குறியீடுகளைக் கொண்டு ஆண்டி வைரஸ் புரோகிராம் அதன் கட்டமைப்பு குறித்து ஒரு முடிவுக்கு வருகிறது. இந்த வகைக் கட்டமைப்பு வைரஸாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அடுத்த நிலை ஆய்வுக்கு அனுப்புகிறது. இது முற்றிலும் சரியானது என்று சொல்ல முடியாது.

எடுத்துக் காட்டாக ஏதேனும் ஒரு புதிய சாப்ட்வேர் புரோகிராமினை நாம் இன்ஸ்டால் செய்திட முயன்றால் அது புதிய வகையாக இருப்பதால் அந்த புரோகிராமில் உள்ள பைல் வைரஸாக இருக்கலாம் என்று ஆண்டி வைரஸ் புரோகிராம் எச்சரிக்கை செய்தி தரலாம். ஏன், பைலையே அழிக்க முயற்சிக்கலாம். இதற்காகத்தான் புதிய புரோகிராம்களை நிறுவுகையில் ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்கத்தினை முடக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.


சந்தேகப்படும் படி அமைப்பு கொண்ட புரோகிராம் பைல்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமினால் ஒதுக்கப்பட்டு அடுத்த நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று குறிப்பிட்டோம் அல்லவா. இந்த நிலையில் இன்னொரு வகை சோதனை நடத்தப்படும். சந்தேகப்படும் புரோகிராமினை கம்ப்யூட்டருக்குள் ளேயே தனியே மற்றவற்றிற்குப் பாதிப்பு இல்லாத வகையில் ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்கிப் பார்க்கும். சந்தேகப்பட்ட குறியீட்டு வரிகள் எவ்வாறு இயங்குகின்றன: அவற்றின் நோக்கம் என்ன என்று கண்காணித்து, பின் அந்த இயக்கத்தை நிறுத்தி, அதனை அனுமதிக்கலாமா அல்லது தடுக்கலாமா என்று முடிவு செய்து செயல்படும்.


மேலே குறிப்பிட்ட வகைகளில் மட்டுமின்றி நவீன தொழில் நுட்பம் தரும் வேறு சில வகைகளையும் இந்த ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் பயன்படுத்துகின்றன. நாளுக்கு நாள் புதிய வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. இருந்தாலும் வைரஸ்கள் வருவதும் நிற்கவில்லை. இந்த போராட்டம் தொடர்வதால் தான் ஒவ்வொரு பெர்சனல் கம்ப்யூட்டரும் அவசியம் ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமினை அமைத்து அவ்வப்போது அப்டேட் செய்து இயக்குவது பாதுகாப்பானது என்று அறிவுறுத்தப்படுகிறது.

வைரஸ் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி?


வைரஸ் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி?

ஆண்டி வைரஸ் புரோகிராம் பதிந்து வைத்திருக்கும் பலர் திடீரென என் ஆண்டி வைரஸ் புரோகிராமினையும் மீறி சில வைரஸ்கள் வந்து என் பொழைப்பையே கெடுத்துருச்சே! என்று அங்கலாய்ப்பார்கள். இந்த ஆண்டி வைரஸ் புரோகிராம்களே இப்படித்தான். வைரஸ்களை எதிர்த்து திடீரென வேலை செய்யாது என்று புலம்புவார்கள். நப்பாசையில் ஆண்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தி ஸ்கேன் ஓடவிட்டுப் பார்ப்பார்கள்.

எந்த வைரஸும் இல்லை என்று செய்தி வந்தவுடன் நம் தலைவிதி அவ்வளவுதான் என்று கூறி டெக்னீஷியன் மூலம் வைரஸ்களைக் காலி செய்வார்கள் அல்லது இந்த புரோகிராம் சரியில்லை என்று வேறு ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமிற்குத் தாவுவார்கள். இது எதனால் ஏற்படுகிறது? என்று சற்றுப் பார்ப்போம். நீங்கள் என்ன செய்கிறீர்கள். நீங்களே அல்லது யார் மூலமாவது ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்கிறீர்கள். அதுவும் அவ்வப்போது நீங்கள் இன்டர்நெட்டில் உலா வருகையில், இமெயில் இறக்குகையில், பிளாஷ் டிரைவ் பயன்படுத்துகையில் சிகப்பு கட்டத்தைக் காட்டி இதில் வைரஸ் இருந்தது. நான் கிளீன் செய்துவிட்டேன் என்று காட்டுகிறது. உங்களுக்கு சந்தோஷமோ சந்தோஷம்.

ஆனால் சிறிது நாட்கள் கழித்து கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கிறது என்று தெரிகிறது. அப்போது தான் முதல் பத்தியில் சொல்லப்பட்ட நிலைக்கு நீங்கள் தள்ளப்படுகிறீர்கள். இங்கு நீங்கள் செய்யத் தவறிய சில செயல்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்ப்போம்.

1. ஆண்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் அதை மறந்துவிடக் கூடாது. அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை அப்டேட் செய்திட வேண்டும். அப்போதுதான் அண்மைக் காலத்தில் வந்த வைரஸ்களைக் கண்டறிவ தற்கான புரோகிராம்கள் டவுண்லோட் செய்யப்பட்டு உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் மேம்படுத்தப்படும். எனவே நீங்கள் ஸ்கேன் செய்வதாக இருந்தால் முதலில் இன்டர்நெட் இணைப்பு பெற்று உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் தந்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று அப்டேட் செய்திடவும். அதன்பின் ஸ்கேன் செய்திடவும்.

2. முதலில் உங்கள் ஆண்டிவைரஸ் புரோகிராமினை எப்படி அமைத்திருக்கிறீர்கள் என்று பார்க்கலாம். வழக்கமாக டாஸ்க் பாரில் வலது ஓரத்தில் இதன் ஐகான் இருக்கும். இதனை டபுள் கிளிக் செய்தால் இந்த புரோகிராம் திறக்கப்படும். ஐகான் இல்லையா? ஸ்டார்ட் கிளிக் செய்து புரோகிராம்ஸ் தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் பட்டியலில் ஆண்டி வைரஸ் புரோகிராமைக் காணலாம். அங்கு கிளிக் செய்திடலாம்.

3. இது திறந்தவுடன் உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமின் மெயின் பக்கத்தில் நீங்கள் இருப்பதைக் காணலாம். இதில் இந்த புரோகிராமின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஏதுவான பிரிவுகள் இருக்கும். அனைத்தையும் பார்த்து ஸ்கேன் செய்வதற்கான பட்டனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.

4. ஸ்கேன் டேபைக் கிளிக் செய்தவுடன் குறிப்பிட்ட டிரைவ் அல்லது அனைத்து டிரைவ்களையுமா எனத் தேர்ந்தெடுக்கும் வசதி கிடைக்கும். அனைத்து டிரைவ்களையும் அல்லது முழு கம்ப்யூட்டரையும் ஸ்கேன் செய்திடும் வசதியினைத் தேர்ந்தெடுக்கவும். உடனே ரிபோர்ட் விண்டோ ஒன்று திறக்கப்படும். ஸ்கேன் முடிந்தவுடன் ஸ்கேன் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு கண்டறியப்பட்ட வைரஸ்கள், அவை இருந்த பைல்கள், வைரஸ் அழிக்கப்பட்டுவிட்டதா, காப்பு இடத்தில் (குவாரண்டைன்) வைக்கப்பட்டுள்ளதா என்று காட்டப்படும்.

இவற்றை அழிப்பதற்கான ஆப்ஷன் உங்களிடமே விடப்படும். அதே மெயின் விண்டோவிலேயே தொடர்ந்து தானாகக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் தானாக ஸ்கேன் செய்திடும் பணியை செட் செய்திடவும் வாய்ப்பு தரப்படும். உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் செய்யப்படும் போதெல்லாம் ஸ்கேன் செய்திடும் வகையிலோ அல்லது வாரம் ஒரு முறை மாதம் ஒரு முறையோ ஸ்கேன் செய்திட செட் செய்திடலாம்.

5. ஆட்டோமேடிக் ஸ்கேன் செய்திட எப்படி செட் செய்வது எனப் பார்ப்போம். முதலில் உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமினைத் திறந்து கொள்ளுங்கள். அதன் பின் டூல்ஸ் (Tools) மெனு செல்லுங்கள். Scheduler என்பதைத் தேர்ந்தேடுங்கள். அதன்பின் Schedule Scan என்ற பிரிவிற்குச் செல்லுங்கள். (இந்த சொற்கள் சில ஆண்டி வைரஸ் புரோகிராமில் வேறு மாதிரியாக இருக்கலாம்) ஷெட்யூல் ஸ்கேன் தேர்ந்தெடுத்தவுடன் நியூ என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

இப்போது சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் வகையில் சில ஆப்ஷன்கள் காட்டப்படும். அவை Event Type, When To Do, How Often, Start Time எனப் பலவகைப்படும். இவற்றின் தன்மைக்கேற்ப உங்கள் முடிவுப்படி செட் செய்திடுங்கள். அனைத்தும் முடித்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இதன்பின் நீங்கள் செட் செய்த படி ஸ்கேன் தானாக நடைபெறும். கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ் இல்லாமல் இயங்கிட எப்போதும் மேம்படுத்தப்பட்ட உயிர்த்துடிப்புள்ள ஆண்டி வைரஸ் புரோகிராம்களை வைத்திருக்கவும். நீங்கள் மறந்தாலும் அது தானாக இயங்கும்படி செட் செய்திடவும்.

இந்த எழுத்து எங்கு இருக்கும்?

வேர்ட் டாகுமெண்ட்டில் அல்லது பிரசன்டேஷன் ஸ்லைட்களில் வரிசையாக 1,2,3 அல்லது a, b, c என அமைக்கும்போது தானாக இந்த வரிசை எண்கள் அல் லது வரிசையான எழுத்துக் கள் அமைக்கப்படும். ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் ஒரு பிரேக் கொடுத்து புதிய வரிசையிலோ அல்லது லைன் ஸ்பேஸ் பிரேக் கொடுத்து அதே வரிசையைத் தொடரவோ திட்டமிடலாம்.

எடுத்துக் காட்டாக
1. Item A
2. Item B
3. Item C
4. Item D
5. Item E
என அமைக்கலாம். இந்த பிரேக் அமைத்திட என்ன செய்கிறீர்கள்? புல்லட் அல்லது நம்பரிங் வசதியை எடுத்துவிட்டு பின் நோக்கிச் சென்று ஒரு லைன் ஸ்பேஸை உருவாக்கிப் பின் மீண்டும் அமைக்கிறீர்கள். எண்கள் தொடர்ந்து வர வேண்டும் என்றால் மீண்டும் அந்த எண்ணுக்கு புல்லட் லிஸ்ட் டைத் தயார் செய்கிறீர்கள்.

தலைவலி தரும் வேலை தானே! இந்த சுற்று வழி தேவையில்லை. இன்னொரு வேகமான வழி உள்ளது. ஷிப்ட் கீயைப் பயன்படுத்துவதுதான். எங்கு இடைவெளி லைன் ஸ்பேஸ் தேவைப்படுகிறதோ அங்கு ஷிப்ட் + என்டர் கீகளை அழுத்தவும். அது அடுத்த வரியை தொடர் எண் அல்லது புல்லட் இல்லாமல் டேட்டாவினை அமைத்திட உதவும். இப்போது மீண்டும் என்டர் கீயை அழுத்துங்கள். ஒரு லைன் ஸ்பேஸ் கொடுத்து மீண்டும் அதே புல்லட் அல்லது தொடர் எண்ணோடு பட்டியல் அமைத்திட வழி கிடைக்கும். எவ்வளவு எளிது என்பதை நீங்கள் வேகமாக இது போன்ற பணிகளில் ஈடுபடும் போதுதான் தெரியும்.

இலவசமாய் கிடைக்கும் பயனுள்ள புரோகிராம்கள்


இலவசமாய் கிடைக்கும் பயனுள்ள புரோகிராம்கள்

இன்டர்நெட் தளத்தில் இலவசமாக நமக்குப் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றின் பயன்பாடுகள் பலவகையாகும். இலவச டிவி, ஆடியோ மற்றும் வீடியோ வசதி, கம்ப்யூட்டரில் ஆட்டோ ஹாட் கீ அமைப்பு என இவை பல்வேறு வகைகளாகும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1. டவுண்லோட் மேனேஜர்: இன்டர்நெட்டினை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு புரோகிராமையாவது டவுண்லோட் செய்கிறார்கள் என ஓர் ஆய்வு கூறுகிறது. எத்தனை வைரஸ் பயமுறுத்தல் இருந்தாலும் இலவசம் மற்றும் புதிய பயன்பாடு என்று தெரிந்தவுடன் அந்த புரோகிராமினை இறக் கிப் பார்க்கத்தான் மனசு துடிக்கிறது. இவ்வாறு டவுண் லோட் செய்திடும் புரோகிராம் களை பலர் தங்கள் கம்ப்யூட்டர் டிரைவ் களில் அப்படியே சாப்ட்வேர் ஸ்டோர் ரூம் தயார் செய்து வைத்துவிடுகின்றனர். 45 சதவிகிதம் பேரே பயன்படுத்துகின்றனர். இது போல டவுண்லோட் செய்பவர்களுக்கு உதவிடும் வகையில் இலவச டவுண்லோட் மேனேஜர் ஒன்று www.freedownloadma nager.com(FDM) என்ற முகவரியில் கிடைக்கிறது.

இதில் டவுண் லோட் சம்பந்தப்பட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. டவுண்லோட் செய்யப்படும் புரோகிராமினைப் பிரித்து டவுண்லோட் செய்வது, ஒரே பைலுக்கு பல மிர்ரர் பைல்களை உருவாக்குவது, யு–ட்யூப் போன்ற வீடியோ தளங்களிலிருந்து பிளாஷ் வீடியோக்களை டவுண்லோட் செய் வது, இதற்கான பிட் டாரண்ட் சப்போர்ட் என இது தரும் வசதிகள் நீண்டு கொண்டே போகின் றன. டவுண்லோட் செய்யப்படும் புரோகிராம் ஸிப் பைலாக இருந் தால் அதில் என்ன என்ன பைல்கள் உள்ளன என்று பார்த்து நமக்குத் தேவயான பைல்களை மட்டும் டவுண்லோட் செய்திடும் வசதி குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாகும். இதனைப் பயன்படுத்தி டவுண்லோட் செய்தவர்கள் அளித்துள்ள கருத்துக்களை இந்த தளத்தின் சமுதாய தளப்பிரிவில் படிக்கலாம். மிகவும் பயனுள்ளவையாகவும் இந்த புரோகிராமினைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ளன. அண்மையில் தரப்படும் இந்த FDM புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரை முழுவதுமாக ஸ்கேன் செய்து நீங்கள் வைத்துள்ள புரோகிராம்கள் அனைத்தும் லேட்டஸ்ட் புரோகிராம்களா என்று சோதனை செய்து அப்படி இல்லை என்றால் அவற்றை அப்டேட் செய்வதற்கான வழிகளையும் தருகிறது. இதைப் போல இன்னொரு புரோகிராமும் இன்டர்நெட்டில் கிடைக்கிறது. அதன் தள முகவரி www.orbitdownloader.com. . ஆனால் FDM போல கூடுதலான வசதிகள் இதில் இல்லை.


2.உங்கள் இஷ்டத்திற்கு ஷார்ட் கட் கீ: கம்ப்யூட்டர் வந்ததிலிருந்து நேரம் மிச்சம் செய்வதற்கும், குறைந்த உழைப்பிற்கும் பல வழிகளை நாம் பெற்று வருகிறோம். அந்த வகையில் கீ போர்டு ஷார்ட் கட் கீகளை அந்த அந்த அப்ளிகேஷன் புரோகிராம்களே தந்து வருகின்றன. எம்.எஸ். ஆபீஸ் மற்றும் பிரவுசர்கள் அனைத்திற்கும் ஹாட் கீகள் உள்ளன.


இருப்பினும் நம் வசதிக்கு நாம் விரும்பும் வகையில் இந்த ஆட்டோ ஹாட் கீகள் அமைந்தால் இன்னும் வசதியாக இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம், விரும்புகிறோம். அந்த வகையில் நமக்கு உதவிட கிடைப்பது Auto Hotkey என்னும் அப்ளிகேஷன் புரோகிராம். இந்த புரோகிராம் www.autohotkey.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் எந்த கீ இணைப்புகளிலும் நீங்கள் விரும்பும்செயல்பாட்டினை அமைத்துப் பயன்படுத்தலாம். அத்துடன் இந்த புரோகிராம் உங்கள் கீ போர்டு மற்றும் மவுஸ் பயன்பாட்டினை பதிவு செய்து அவற்றை நீங்கள் விரும்பும் எத்தனை முறையும் சுருக்கமாகச் செயல்படுத்த உதவிடுகிறது. இந்த புரோகிராம் தன்னுடைய ஸ்கிரிப்டிங் மொழியைப் பயன்படுத்துகிறது. இதை உணர்ந்து பயன் படுத்துவதும் எளிது. தெரிந்து கொண்டால் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் நம்மால் ஆட்டோ ஹாட் கீ களை அமைக்கலாம். இந்த ஸ்கிரிப்டிங் மொழியைக் கட்டாயம் கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதில்லை. இந்த புரோகிராம் தரும் ஆட்டோ ஸ்கிரிப்ட் ரைட்டர் உங்களுக்காக மேக்ரோக்களைப் பதிவு செய்கிறது.

ஆட்டோ ஹாட் கீ புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் உங்களுக்குப் பிடித்த அப்ளிகேஷன் புரோகிராம்களைத் திறக்க ஆட்டோ ஹாட் கீகளை உருவாக்கலாம். எடுத்துக் காட்டாக Windows + W இணைந்து எம்.எஸ்.வேர்டைத் திறக்குமாறு செய்திடலாம். இப்படியே பல புரோகிராம்களுக்கான ஹாட் கீகளை அமைக்கலாம். ஆனால் இந்த புரோகிராமின் முழு பயனை அடைய இதன் ஸ்கிரிப்டிங் மொழியை புரிந்து கொள்வது நல்லது. இதற்கான வழிகாட்டியும் இந்த தளத்தில் உள்ளது. அதன் முகவரிwww.autohotkey.com/docs/scripts.htm. நீங்கள் உருவாக்கும் ஹாட் கீகளை எடுத்துச் சென்று பயன்படுத்தும் வசதியும் உள்ளது. ஒவ்வொரு ஸ்கிரிப்டையும் ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக உருவாக்கலாம். அதன் மீது ரைட் கிளிக் செய்து Compile script என்பதில் கிளிக் செய்தால் அது ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக உருவாகும். இந்த பைலை எந்த பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் புதிய கம்ப்யூட்டரில் சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு உங்களுக்கு உதவிடும். Exit கொடுத்தால் இவற்றிலிருந்து வெளியேறலாம். புதிய அந்த கம்ப்யூட்டரில் எந்த பாதிப்பையும் ஏற்படுத் தாது. இதே போன்ற இன்னொரு புரோகிராம்http://www.winkeymx.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் உள்ளது. ஆனாலும் ஆட்டோ ஹாட் கீ போல அனைத்து வசதிகளையும் தரும் வேறு புரோகிராம் எதுவும் இல்லை என்றே கூறலாம்.

3.இலவச டிவி புரோகிராம்: இன்டர்நெட் இணைப்பு வசதி குறைந்த கட்டணத்தில் கிடைப்பதால் (மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு மிக மிக அதிகம்தான்) பலரும் இதன் மூலம் அனைத்து வசதிகளையும் பெற எண்ணுகின்றனர். அவ்வகையில் டிவி மற்றும் திரைப்படங்களையும் பார்க்க துடிக்கின்றனர். உங்களிடம் மத்திய நிலை வேகத்தில் இன்டர்நெட் இணைப்பு வசதி இருந்தால் இது சாத்தியமே. இந்த வகையில் நமக்கு உதவிடுவது Joost என்னும் புரோகிராம் ஆகும்.

இது www.joost.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. முற்றிலும் இலவச டிவி தரும் புரோகிராம் என இதனைக் கூறலாம். மேலே குறிப்பிட்டுள்ள தளத்திலிருந்து Joost புரோகிராமினை டவுண்லோட் செய்து கொள்ளவும். இந்த கிளையண்ட் புரோகிராம் மூலம் உலகெங்கும் உள்ள டிவி நிகழ்ச்சிகளைக் காண முடிகிறது. (ஆனால் எத்தனை நிகழ்ச்சிகளை நாம் பார்த்து புரிந்து ரசிக்க முடியும் என்பது வேறு விஷயம்) இதன் மூலம் கிடைக்கும் வீடியோவின் தன்மை அவ்வளவு சிறப்பாக இருக்குமா என்பது நீங்கள் பயன்படுத்தும் சாதனங்களைப் பொறுத்து உள்ளது. இருந்தாலும் பார்க்க சகிக்க முடியாத அளவில் இது அமைவதில்லை. இது தரும் சேனல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் அசந்து போவீர்கள். மொத்தம் 480 சேனல்களைத் தருகிறது. இதனை வகை வகையாகப் பிரித்தும் பார்க்கலாம். காமெடி, கார்ட்டூன், டாகுமெண்டரி என வகைகளும் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு சேனலிலும் உங்களுக்குப் பிடித்த படக் காட்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை இணைத்து பார்க்கும் வகையில் அமைத்துக் கொள்ள வசதி தரப்பட்டுள்ளது. இந்த Joost புரோகிராமின் சிறப்பு நாம் கேட்பதை வழங்குவதுதான். நாம் விரும்புவதை நாம் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் தருகிறது. எப்போது வேண்டுமானாலும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனை மூடிவிடலாம். ஆனால் ஒரு சின்ன பிரச்னை உள்ளது. விளம்பரங்களையும் நாம் பார்த்தே ஆக வேண்டும். ஏனென்றால் அவை தரும் நிதி பலத்தில் தான் இந்த இலவச டிவி புரோகிராம் இயங்குகிறது. அதனால் என்ன! இங்கு நாம் கேபிளுக்குப் பணம் கட்டிப் பார்க்கையில் எத்தனை விளம்பரங்கள் வருகின்றன என்று நீங்கள் அங்கலாய்ப்பது தெரிகிறது. எனவே குறுக்கிடும் விளம்பரங்களுக்குப் பழகிய நமக்கு Joost தரும் விளம்பரங்கள் ஒரு பொருட்டே அல்ல. இதே போல இன்னொரு தளம் இதுவரை எனக்குத் தென்படவில்லை.

4.சிடிக்களில் எழுத: நம்முடைய கம்ப்யூட்டர்களில் சிடி மற்றும் டிவிடி ரைட்டர்களை நிறுவுகையில் அதனுடன் வரும் நீரோ சிடி ரைட்டிங் புரோகிராமுடன் பழகிப் போன நமக்கு அதே போல மற்ற புரோகிராம்கள் குறித்து எண்ணுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. இருந்தாலும் நீரோ போலவே, அதன் வசதிகளுக்கு இணையான வசதிகளைத் தரும் இலவச புரோகிராம்களும் இருக்கின்றன என்பதுதான் உண்மை. சிடி மற்றும் டிவிடிக்களில் தகவல்களை எழுத CD Burner XP என்றொரு புரோகிராம் http://cdburnerxp.se என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. சிடி, டிவிடி மற்றும் புளுரே டிஸ்க்குகளில் நீரோ போலவே அனைத்து வகை தகவல்களையும் எழுதுகிறது. ஐ.எஸ்.ஓ. இமேஜ்களை சிடிக்களில் அமைத்துத் தருகிறது. ஆடியோ சிடிக்களை உருவாக்குகிறது. இப்படி நீரோ நமக்குத் தரும் அனைத்து செயல்பாடுகளையும் தருகிறது. இதனுடைய இன்டர்பேஸும் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. ஜஸ்ட் ட்ராக் அண்ட் ட்ராப் என்ற முறையில் அமைந்துள்ளது. 2.8 எம்பி அளவிலான இந்த பைல் அநாவசியமாக எந்த தகவலையும் எழுதிவைப்பதில்லை. சிடிக்களின் இடத்தை வேஸ்ட் செய்வதில்லை. இதனைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டீர்கள் என்றால் நிச்சயம் நீரோ புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்வது குறித்து யோசிக்கத் தொடங்கிவிடுவீர்கள் என்பது உறுதி.

5. உங்கள் கம்ப்யூட்டரைத் தூக்கிச் செல்ல: நம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை நாம் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது. ஏன், லேப் டாப் கம்ப்யூட்டரைக் கூடத் தூக்கிச் செல்வது எளிதான காரியம் இல்லை. யு.எஸ்.பி. டிரைவைத்தான் எடுத்துக் செல்கிறோம். இதனால் நாம் வேறு ஒருவரின் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் அதன் டெஸ்க் டாப், சூழ்நிலை ஆகியவை நமக்கு அந்நியமான ஒரு வேலை தளத்தைத் தருகிறது. அப்படியானால் நாம் பாக்கெட்டில் போட்டுச் செல்லும் யு.எஸ்.பி. டிரைவில் நம் கம்ப்யூட்டரின் சூழ்நிலையை நமக்குத் தரும் வகையில் அமைத்திட முடியுமா? ஆம், முடியும். இதற்கு ஒரு வழியாகத்தான் MojoPac என்னும் புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது. இதனை www.mojopac.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். மிக எளிதாக இதனை உங்கள் யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து கொள்ளலாம். நீங்கள் எந்த கம்ப்யூட்டரில் உங்கள் டிரைவை இணைத்துச் செயல்படுத்தத் தொடங்கினாலும் அது உடனே உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் சூழ்நிலையைத் தருகிறது. இதனால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இந்த MojoPac புரோகிராம் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி ஒரு புதிய சூழ்நிலையை உருவாக்குகிறது. உங்கள் யு.எஸ்.பி. டிரைவ் உங்களின் இ: டிரைவாக மாறுகிறது. இதனால் எந்த கம்ப் யூட்டரில் இதனைப் பயன்படுத்துகிறீர்களோ அதில் உள்ள புரோகிராம்களுக்கு உங்களுக்கு அனுமதி கிடைக்காது. ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குத் தேவயான புரோகிராம்களை நீங்கள் பதிந்து இயக்கிக் கொள்ளலாம். இந்த புரோகிராம்கள் நீங்கள் எங்கெல்லாம் இந்த டிரைவை இணைத்துப் பயன் படுத்துகிறீர்களோ அங்கெல் லாம் கிடைக்கும்.

இதன் வேகத்தை அதிக பட்சம் பயன் படுத்த வேண்டும் என்றால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து அதில் யு.எஸ்.பி. டிரைவ் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். இதில் ஹார்ட்வேர் என்னும் பகுதியில் யு.எஸ்.பி. டிரைவைத் தேர்ந்தெடுத்து அதில் புராபர்ட்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் ஏற்கனவே “Optimize for quick removal” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இதற்குப் பதிலாக “Optimize for Performance” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். MojoPac போல செயல்படும் புரோகிராம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களை எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த Portable Apps Suite என்னும் புரோகிராம் www.portableapps.com /suite என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இலவசமாய் எவ்வளவோ இணையத்தில் கிடைக்கின்றன. ஏற்கனவே வாசகர்களுக்குத் தெரிந்த பல புரோகிராம்களை விட்டுவிட்டு தெரியாத ஆனால் பல பயன்பாடுகளைத் தருகின்ற புரோகிராம்கள் குறித்து மேலே தகவல்கள் தரப்பட்டுள் ளன. தேவைப்பட்டால் மட்டுமே இறக்கி இன்ஸ் டால் செய்து பயன்படுத்தவும். உங்கள் அனுபவத்தினை எங்களுக்கு எழுதவும்.

பிளாஷ் டிரைவிற்கு ஆண்டி வைரஸ் பாதுகாப்பு


பிளாஷ் டிரைவிற்கு ஆண்டி வைரஸ் பாதுகாப்பு

கையில் எடுத்துச் செல்லும் சிறிய கம்ப்யூட்டர் போல தற்போதைய பிளாஷ் டிரைவ் உருவாகி வருகிறது. சென்ற இதழ்களில் பிளாஷ் டிரைவில் வைத்து எந்த கம்ப்யூட்டரிலும் இயக்கக் கூடிய சில தொகுப்புகள் குறித்த தகவல்கள் தரப்பட்டன. அப்படியானால் இந்த பிளாஷ் டிரைவ்களிலும் ஆண்டி வைரஸ் தொகுப்புகளைப் பதிந்து வைத்து அதில் வைரஸ்கள் நுழைந்துவிடாமல் பாதுகாக்கலாமே என்று பல வாசகர்கள் கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். இந்த எண்ணத்துடன் இணையத்தை தேடியபோது சில பயனுள்ள தகவல்கள் கிடைத்தன.

பிளாஷ் டிரைவ்களை நாம் பல்வேறு கம்ப்யூட்டர்களில் இணைத்துப் பயன் படுத்துகிறோம். பெரும்பான்மையான கம்ப்யூட்டர்களில் வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்று தெரியாது. அவற்றை அவ்வப்போது செக் செய்திடவும் முடியாது. அவை தரும் பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதத்தையும் பெற முடியாது. அப்படியே அந்த கம்ப்யூட்டரில் ஆண்டி வைரஸ் புரோகிராம் இருந்தாலும் அது அப்டேட் செய்யப்பட்டதா எனவும் நாம் உறுதி செய்து கொள்ள முடியாது. எனவே பாதுகாப்பற்ற ஒரு கம்ப்யூட்டரில், பிளாஷ் டிரைவை இணைத்துப் பயன்படுத்துகையில் நம் பிளாஷ் டிரைவ் வைரஸால் பாதிக்கப்பட்டு அதில் உள்ள தகவல்களை இழக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். இந்நிலையில் தான் நம் பிளாஷ் டிரைவினையும், வைரஸ் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் புரோகிராம்களிலிருந்து பாதுகாக்க வேண்டியதுள்ளது. அதற்கான ஒரு புரோகிராம் குறித்து இங்கு காணலாம். AntiVir personal Edition என்னும் புரோகிராம் இவ்வகையில் சிறந்த புரோகிராமாக நமக்குக் கிடைக்கிறது. இதனை http://www. freeav.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். இந்த புரோகிராமினை பிளாஷ் டிரைவில் பதிந்து அதிலிருந்தே இயக்கலாம். இதனால் வைரஸால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரிலிருந்து வைரஸ்கள் பரவுவது தடுக்கப்படுகிறது. இந்த புரோகிராமினையும் தேவைப்படும்போது அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். இதை நம் பிளாஷ் டிரைவில் பதிந்து கொள்வதும் எளிதாக உள்ளது.


AdAware SE Personal Edition 1.06 : இந்த புரோகிராம் நம் பிளாஷ் டிரைவிற்குள் எந்த ஸ்பை வேர் புரோகிராமும் நுழையவிடாமல் பாதுகாக்கிறது. இவ்வகையில் இதன் திறன் மிகவும் சிறப்பாக இருக்கிறது.


இந்த புரோகிரமினை இன்ஸ்டால் செய்திடுகையில் நேரடியாக உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் முதலில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். அதன் பின் Start, Programs, எனச் சென்று அங்கு கிடைக்கும் AdAware பைலினை உங்கள் பிளாஷ் டிரைவில் காப்பி செய்து விடுங்கள். பிளாஷ் டிரைவ் பாதுகாப்பில் இருக்கும் படி செட் செய்துவிடுங்கள். ஒரு சிலர் இவ்வளவு வேலை இருக்கிறதா? பேசாமல் பிளாஷ் டிரைவினை நம்பிக்கையற்ற பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இணைக்க வேண்டாம் என்று எண்ணுவார்கள். இந்தக் காலத்தில் நம்பிக்கை உள்ள மற்றும் நம்பிக்கை இல்லாத கம்ப்யூட்டர் என்று எதுவுமே இல்லை. எதில் வேண்டு மானாலும் மோசமான வைரஸ் இருக்கலாம். ஒரு முறை தலைமைச் செயலகத்தில் ஆணையர் ஒருவரின் பெர்சனல் கம்ப்யூட்டரில் இருந்து வீட்டில் பைல் பார்ப்பதற்காக பைல் ஒன்றினைக் காப்பி செய்திட வேண்டி இருந்தது. தலையில் சத்தியம் செய்யாத குறையாக வைரஸ் எதுவுமில்லை என்று சொன்னதால் பைலைக் காப்பி செய்து என் வீட்டிற்குக் கொண்டுவந்தேன். அதிக அதிகாரமிக்க அதிகாரியின் கம்ப்யூட்டரில் வைரஸ் எங்கிருக்கப் போகிறது என்று அசட்டுத் தைரியம். உயர் அதிகாரி சொல்லும் போது கேட்கத்தானே வேண்டும் என்கிற மரியாதை. பைலைக் காப்பி செய்து என் கம்ப்யூட்டருக்குமாற்றினேன். அடுத்த முறை பூட் செய்திடுகையில் பைல்கள் எல்லாம் தடுமாறின; தலைகீழாக மாறின; ஒவ்வொரு பைலும் ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக மாறின. அவ்வளவு தான் அன்று இரவு சிவராத்திரி. என்ன செய்தும் வைரஸ் நகர மறுத்தது. இறுதியில் வேறு வழியின்றி ஹார்ட் டிஸ்க்கில் சி டிரைவினை ரீ பார்மட் செய்து பைல்களை மீண்டும் காப்பி செய்து உறங்க அதிகாலை மூன்று மணி ஆயிற்று. இத்தனைக்கும் என் கம்ப்யூட்டரில் நல்ல திறன் கொண்ட ஆண்டி வைரஸ் உள்ளது. எனவே பாதுகாப்பு வளையங்களை மட்டும் அதிகப்படுத்தினால் போதாது. எச்சரிக்கையுடனும் கம்ப்யூட்டர்களைக் கையாள வேண்டும்.

இலவச டவுண்லோட் புரோகிராம்கள்


இலவச டவுண்லோட் புரோகிராம்கள்

இன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் இணைப்பு வழங்கும் வேகத்தைப் பயன்படுத்தி நாம் டவுண்லோட் செய்திடும் பைல்களை எந்த சிக்கலுமின்றி வேகமாக இறக்கித் தர நமக்கு டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் தேவைப்படுகின்றன.

அவ்வகையில் இணையத்தில் பல இலவச புரோகிராம்கள் நமக்கு கிடைக்கின்றன. பயர்பாக்ஸ் தொகுப்புடன் இத்தகைய வசதி இணைந்தே இருந்தாலும் டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் தரும் பல வசதிகள் அதில் இல்லை. ஒரே பைலுக்கான பல டவுண்லோட் இøணைப்புகள், பிரிவு பிரிவாக டவுண்லோட் செய்திடும் வசதி, பல பைல்களை ஒரே முறை கிளிக் செய்து டவுண்லோட் செய்திடும் வசதி போன்ற பல வசதிகளை இந்த டவுண்லோட் மேனேஜர்கள் தருகின்றன. பொதுவாக இந்த கூடுதல் வசதிகள் எல்லாம் இத்தகைய புரோகிராம்களில் கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்புகளில் மட்டுமே கிடைக்கும். ஆனால் இலவச புரோகிராம்கள் அதிகமான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு கிடைக் கும் இந்நாளில் மேல் குறிப்பிட்ட வசதிகள் இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம்களிலேயே தரப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில டவுண்லோட் மேனேஜர்களில் அதிகமான எண்ணிக்கையில் இந்த வசதிகள் தரப்பட்டிருப்பது இன்னும் சிறப்பாகும். அவற்றில் மிகச் சிறந்த மூன்று டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன.

Free Download Manager
1. புரோகிராம் பெயர் : FreeDownload Manager
2. வழங்குபவர் : FreeDownload Manager.org
3. இன்டர்நெட் தள முகவரி:http://www.freeDownloadManager.org/download.htm
4. பைல் அளவு: 5754 கேபி.

இது ஒரு ஓப்பன் சோர்ஸ் சாப்ட் வேர் தொகுப்பு. இதன் பெயருக்கேற்ற வகையில் சிறப்பான பல வசதிகளை இந்த புரோகிராம் தருகிறது. அனைத்து பிரவுசர் தொகுப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட இன்டர்பேஸ் இயங்குகிறது. எப்.டி.பி. மற்றும் எச்.டி.டி.பி. வகைகளுக்குத் தனித்தனியே கிளையண்ட் புரோகிராம்கள் இணைக்கப்பட்டுள்ளன.

டவுண்லோட் செய்யப்பட வேண்டிய புரோகிராம்களை பகுதி பகுதிகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் வேகமாக டவுண்லோட் செய்து தருகிறது. டவுண்லோட் செய்திடும் நேரத்தில் இன்டர்நெட் தொடர்பு விட்டுப் போனாலோ அல்லது கம்ப்யூட்டர் முடங்கிப் போனாலோ அடுத்த முறை விட்டுப்போன இடத்திலிருந்து பைலை டவுண்லோட் செய்து இணைத்து தரும் திறன் கொண்டது. வீடியோ தளங்களிலிருந்து டவுண்லோட் செய்வதுடன் பார்மட்டுகளையும் மாற்றி தருகிறது. இதனுடன் இணைத்துத் தரப்பட்டுள்ள அப்லோட் மேனேஜர் புரோகிராம் பைல்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள அப்லோட் செய்திடும் வசதியைத் தருகிறது. ஒரு பைலை பல்வேறு லிங்க்குகளிலிருந்து ஒரே நேரத்தில் டவுண்லோட் செய்து தரும் திறன் கொண்டது. டவுண்லோட் செய்யப்படும் பைல்களை அதன் வகைகளுக்கிணங்க சேவ் செய்து நிர்வகிக்க உதவிடுகிறது.
ஒரு பைலை டவுண்லோட் செய்திடும் முன் அந்த பைல் குறித்து மற்றவர்கள் என்ன கருத்து தெரிவித்துள்ளார்கள் என்று காட்டப்படுகிறது. அதே போல நீங்களும் உங்கள் கருத்தைப் பதிவு செய்திடலாம். இதனால் கெடுதல் விளைவிக்கும் பைல்களை டவுண்லோட் செய்திடுவதனைத் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கும் எச்சரிக்கை செய்திடலாம்.

முழு இணையதளத்தையும் அப்படியே டவுண்லோட் செய்திடும் திறன் கொண்டது. இதற்கென எச்.டி.எம்.எல். ஸ்பைடர் என ஒரு புரோகிராம் பிரிவு தரப்படுகிறது. அதனால் தான் இதனை சைட் ரிப்பர் (‘site ripper’) என அழைக்கின்றனர்.

Orbit Downloader
1. புரோகிராம் பெயர் : OrbitDownloader
2. வழங்குபவர் : OrbitDownloader.com
3. இன்டர்நெட் தள முகவரி: http://www.orbitdownloader.com/download.htm
4. பைல் அளவு: 2217 கேபி.

டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்களின் லீடர் என இது செல்லமாக அழைக்கப்படுகிறது. ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட துணை புரியும் நோக் கத்துடன் இந்த புரோகிராம் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. புதிய சில அம்சங்களுடன் வழக்கம்போலான இ.எக்ஸ்.இ. மற்றும் காம் பைல்கள் மட்டுமின்றி ஸ்ட்ரீமிங் மீடியா வகையைச் சேர்ந்த ஆடியோ மற்றும் வீடியோ பைல் களை டவுண்லோட் செய்திடுகிறது. யு–ட்யூப் மற்றும் மை ஸ்பேஸ் போன்ற சில தளங்களிலிருந்து நேரடியாக டவுண் லோட் செய்திடும் வசதியைத் தருகிறது. இன்றைக்குக் கிடைக்கும் சிறந்த டவுண் லோட் மேனேஜர் புரோகிராம்களில் ஒன்று எனப் பலராலும் பாராட்டுப் பெற்றது.

இதனைப் பயன்படுத்த எந்தவிதமான ரெஜிஸ்ட்ரேஷனும் தேவையில்லை. விளம்பரங்களோ அல்லது ஸ்பை வேர் புரோகிராம்களோ இல்லை என சான்று பெற்றது. யு–ட்யூப் வீடியோக்களை டவுண்லோட் செய்திட இது மிக உகந்தது என பாராட்டுப் பெற்றது. தற்போதைய பதிப்பு 2.7.3.

Flash Get
1. புரோகிராம் பெயர் : FlashGet
2. வழங்குபவர் : Trend Media
3. இன்டர்நெட் தள முகவரி: http://www.flashget.com/download.htm 
4. பைல் அளவு: 4520கேபி.

இன்டர்நெட்டில் மிக அதிகமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண் டுள்ள புரோகிராமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. டவுண் லோட் செய்கையில் நாம் பொதுவாக எதிர்நோக்கும் இரண்டு பிரச்னைகளை இது எளிதாக தீர்த்து வைக்கிறது. முதலாவது வேகம்; இரண்டாவது டவுண்லோட் செய்யப் பட்ட பைல்களைக் கையாளும் முறை; அவற்றை சோதனை செய்துவகைப்படுத்தும் வழிகள்.

இந்த புரோகிராம் முதலில் சீன சொல்லை ஒட்டி ஒஞுtஞிச்ணூ என அழைக்கப் பட்டது. இதன் புதிய பதிப்பு 1.9.6. இதில் மல்ட்டி சர்வர் ஹைபர் த்ரெடிங் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இதனால் பல்வேறு புரோடோகால் முறைகளை இதில் பயன்படுத்தி டவுண் லோட் செய்திடலாம். இறக்கப் படும் பைலின் அளவிற்கேற்ப பைல் இறக்கப் படும் வேகம் 6 முதல் 10 முறை அதிகரிக்கப்படுகிறது.

டவுண்லோட் செய்யப் படும் பைலை பகுதிகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் இந்த பகுதிகளை டவுண்லோட் செய்து பின் இணைத்துத் தருகிறது. ஒரு பைல் மட்டுமல்ல, ஒரே நேரத்தில் பல பைல்களை இது போல பிரிவுகளாகப் பிரித்து டவுண்லோட் செய்கிறது. அத்துடன் எந்த நேரத்தில் எந்த பைலை டவுண்லோட் செய்திட வேண்டும் என வரையறை செய்திடலாம். இதனால் நம் இன்டர் நெட் இணைப்பு வேகத்தினை ஒட்டியும் நம் தேவையை பொறுத்தும் டவுண் லோட் செய்திட முடிகிறது.

இந்த புரோகிராமைப் பயன்படுத்துகையில் எந்த அட்–வேர் புரோகிராமும் குறுக்கிடாது. எந்தவிதமான ஸ்பைவேர் புரோகிராமும் இல்லை என்று பலராலும் கணிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைவான ராம் மெமரியைப் பயன்படுத்துவதால் டவுண்லோட் செய்திடுகையில் நம்முடைய வேலையை கம்ப்யூட் டரில் தொடர்ந்து மேற் கொள்ளலாம். டவுண்லோட் முடிந்தவுடன் தானாக கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி டவுண்லோட் செய்யப் பட்ட பைலில் வைரஸ் எதுவும் இருக்கிறதா என்று சோதனை செய்கிறது.


ஒரே பைலுக்கான பல டவுண்லோட் இøணைப்புகள், பிரிவு பிரிவாக டவுண்லோட் செய்திடும் வசதி, பல பைல்களை ஒரே முறை டவுண்லோட் செய்திடும் வசதிபோன்ற பல வசதிகளை இந்த டவுண்லோட் மேனேஜர்கள் தருகின்றன. அவற்றில் மிகச் சிறந்த மூன்று டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. டவுண்லோட் செய்கையில் நாம் பொதுவாக எதிர்நோக்கும் இரண்டு பிரச்னைகளை இது தீர்த்து வைக்கிறது. முதலாவது வேகம்; இரண்டாவது டவுண்லோட் செய்யப்பட்ட பைல்களைக் கையாளும் முறை; அவற்றை சோதனை செய்து வகைப்படுத்தும் வழிகள்.

அது என்ன ஹெர்ட்ஸ்


அது என்ன ஹெர்ட்ஸ்

கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் பற்றிப் பேசுகையில் நாம் அடிக்கடி மெகா ஹெர்ட்ஸ் மற்றும் கிகா ஹெர்ட்ஸ் என்று பேசுகிறோம், படிக்கிறோம். இந்த ஹெர்ட்ஸ் எதனைக் குறிக்கிறது? ஏன் இந்த பெயர் வந்தது என்று பார்ப்போமா!

ஹெர்ட்ஸ் என்பதனை சுருக்கமாக Hz என்று எழுதுகிறோம். இது Hertz என்பதன் சுருக்கம். இது ஜெர்மன் பிசிக்ஸ் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர். ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் வைக்கப்பட்டது. ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு (ரேடியோ அலைவரிசையில்) கம்ப்யூட்டரைப் பொறுத்த வரை இது மானிட்டருடன் அதிகம் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது. சி.ஆர்.டி. மானிட்டர் (டிவி பெட்டி போல இருப்பது) அதன் ஸ்கிரீன் இமேஜை தொடர்ந்து காட்டாமல் விட்டு விட்டுத் தான் காட்டுகிறது. ஆனால் அதனை நாம் நம் கண்களால் பார்த்தால் கண் கெட்டுப் போகும். எனவே தான் விநாடியில் பலமுறை இது விட்டு விட்டுக் காட்டப்படுகையில் இடைவெளி தெரிவதில்லை. எடுத்துக் காட்டாக 85 Hz என்பதில் விநாடி நேரத்தில் 85 முறை இமேஜ் பின் வாங்கப்பட்டு மீண்டும் காட்டப்படுகிறது. அத்தனை முறை காட்டப்படுவதனாலேயே இமேஜ் அப்படியே நிலையாக நிற்பது போல நாம் உணர்கிறோம்.

மெஹா ஹெர்ட்ஸ் Mehahertz (MHz) ஒரு மெஹா ஹெர்ட்ஸ் என்பது பத்து லட்சம் சுற்றுகளாகும். அதாவது ஒரு விநாடியில் பத்து லட்சம் சுற்றுகள் ஏற்படுகின்றன. இது எப்படி ஏற்படுகிறது என்பதனை படமாகவோ அல்லது வேறு வழியாகவோ விளக்குவது கஷ்டம். கம்ப்யூட்டர் பிராசசரைப் பொறுத்தவரை மெஹா ஹெர்ட்ஸ் என்பது மிகவும் சாதாரணம். ஒரு கம்ப்யூட்டர் பிராசசர் உள்ளாக அமைந்த ஒரு கடிகார துடிப்பினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப்படுகிறது. எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பதுதான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் என அழைக்கப்படுகிறது. இந்த வேகம் மெஹா ஹெர்ட்ஸ் என்பதில் அளக்கப் படுகிறது.

முதலில் வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 4.77 மெஹா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசசர்களைக் கொண்டிருந்தன. அதாவது விநாடிக்கு ஏறத்தாழ 48 லட்சம் கிளாக் துடிப்புகள். தற்போதைய பெண்டியம் 4 கம்ப்யூட்டர் பிராசசர் 3.2 கிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டுள்ளன. (ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ்.) எனவே கணக்குப் போட்டு இந்த அதிவேக துடிப்புகளை உணர்ந்து கொள்க. கிஹா ஹெர்ட்ஸ் Gigahertz (GHz) கம்ப்யூட்டர் உலகில் இது கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ். தற்போது வரும் கம்ப்யூட்டர் பிராசசர் வேகம் இந்த அளவிலேயே சொல்லப்படுகிறது.